மறுநாள் ரேவதி என் வீட்டிற்கு வரச்சொல்லி எல்லாவற்றையும் சொன்னேன், அவளும் கீர்த்திக்கு ஆதரவாக பேசி தைரியமாக இருக்க சொல்லிவிட்டு வந்தாள். அவள் என்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் சொன்னால், நானும் அவளுடன் சென்றேன், வனிதாவும் கூடவே வந்தாள். ரேவதி என்னை பார்த்து " கயல் குடுபத்திற்குகாக எதுவும் செய்வாய் அல்லவா " என்று கேட்க, நான் ஆமாம் என்றேன். அவள் இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு அதுக்குள்ள கல்லூரியில் பணம் கட்ட வேண்டும் அதனால் அந்த சிவா பற்றி சொன்னாய் அல்லவா அவருக்கு கால் பண்ணி help கேளு என்று சொன்னால் , நான் வேண்டாம் என்றேன். அதற்கு ரேவதி இதுதான் உனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு வேண்டுமென்றால் கேளு இல்லை என்றால் கீர்த்தியும் உன்னை போல ஒரு கம்பெனிக்கு தான் செல்ல வேண்டும் என்றாள். நான் தயங்கினேன் பிறகு அவளிடம் என்னிடம் அந்த கார்ட் ஐ அங்கேயே போட்டு விட்டு வந்துட்டேன் என்றேன். ரேவதி என்னடி கயல் இப்படி பண்ணிட்ட என்று சொல்ல, சற்று யோசித்தேன் அவர் என் பாக்ட்டில் ஒரு கார்ட் போட்டது நியாபகம் வந்தது, உடனே வனிதாவிடம் அந்த பண்ட் பாக்ட்டில் இருந்து எடுத்து வர சொன்னேன். அவளும் சென்று எடுத்து வந்தாள். சிவாவுக்கு போன் செய்ய தயங்கினேன் , ஆனால் ரேவதி விடுவதாக இல்லை போன் செய்ய சொன்னால், நான் அவருக்கு போன் செய்தேன், அவர் எடுத்ததும் நான் தயங்கி கொண்டே கயல் பேசுகிறேன் என்றேன். அவர் பதற்றத்துடன் என்ன சொல்லுங்க கயல் என்று கேட்க அவர் குரலில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது. என்னால் எதுவும் பேச முடியவில்லை , என் கையில் இருந்த போனை பிடிங்கி loudspeaker போட்டு அவள் பேச ஆரம்பித்தாள். ரேவதி அவரிடம் " சிவா உங்க கயலுக்கு ஒரு உதவி வேணும் அதை கேக்கதான் போன் செய்தார், ஆனால் அவருக்கு கேக்க தைரியமில்லை அதனால் நான் கேட்குறேன் என்றாள்.
அவர் என்ன என்று கேட்க, ரேவதி அவரிடம் கயலுக்கு உடனடியாக 5 லட்சம் வேண்டும் என்று உங்களால் தர முடியுமா என கேட்க , அவர் உடனே கயலுக்கு 5 லட்சம் என்ன அதுக்கு மேல கூட தருவேன் , ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை உண்டு என்றார். ரேவதி என்ன என்று கேட்க, அதற்கு அவர் என்னை கயல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் சொல்ல, பதிலுக்கு ரேவதி அவரிடம் கயல் சூழ்நிலை தெரிந்து கொண்டு blackmail பண்றிங்களா என்று கேட்டாள் . உடனே அவர் அப்படியில்லை " எனக்கு கயலை பார்த்த முதல் நாளே பிடித்து விட்டது என்னோட கெட்ட நேரம் அவர் ஆணாக பிறந்து விட்டார், பெண்ணாக இருந்திருந்தால் வீட்டுக்கு சென்று பேசிருப்பேன். அவருக்கு தெரியாமல் ஒரு மாதம் அவர் பின்னாடி சுற்றினேன் , பேருந்தில் உங்கள் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து கொண்டு தான் வருவேன் , அவருடைய கதையை கேட்ட பிறகு அவர் மேல எனக்கு இருந்த மரியாதையும் பாசமும் என்னையும் அறியாமல் அதிகமாகியது. நான் தினமும் உங்களை பின் தொடர ஆரம்பித்தேன். உண்மையா சொல்லனும்னா அவர ஒருதலயா காதலிச்சேன். ஆனா அவர்கிட்ட என் காதல சொன்னா என்ன திட்டிடுவாரோனு பயமாவும் இருந்துச்சு, அப்படி இருந்தும் ஒரு நாள் என்னுடைய விருப்பத்தை சொன்னேன் ஆனால் அதன் பின் அவர் எதுவும் சொல்லவில்லை என்றார்" , அவர் சொல்லி முடித்ததும் , ரேவதி பணத்தை தரிங்களா இல்லையா என்று கேட்டார் . அதற்க்கு சிவா தருகிறேன் காலையில் என்னுடைய நண்பரிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்றார் , அதை கேட்டதும் எனக்கு அளவிள்ள மகிழ்ச்சி , நான் அவருக்கு நன்றி சொன்னேன். மறுபடியும் சிவா எண்னிடம் உங்களுடைய பதிலிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன் என்றார்.நான் எதுவும் சொல்லாமல் போனை கட் செய்தேன். இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ரேவதி அவள் வீட்டிற்கு சென்றாள், நான் வனிதாவை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றேன். அன்று இரவு தூங்காமல் படுத்து யோசித்து கொண்டு இருந்தேன் அப்போது வனிதா வந்து என் அருகில் உட்கார்ந்தாள், என்னிடம் அண்ணா அவர் சொன்னதை யோசித்து கொண்டு இருக்கிறீர்களா என்று கேட்டால் ஆமாம் என்றேன், அவள் அழுது கொண்டேஎன்னிடம் அவர் கேட்ட மாதிரி எதுவும் செய்து விடாதீர்கள் என்னால் உங்களை பிரிந்தும் இருக்க முடியாது அதுவும் அவருக்கு மனைவியாக உங்களை அனுப்பமாட்டேன் என சொன்னால், நான் அவளை சமாதானம் செய்து தூங்க வைத்தேன், நானும் தூங்கிவிட்டேன்.
Comments
Post a Comment