ஒருவாரம் சென்றது ஒருநாள் தூங்கி கொண்டு இருக்கும் போது அம்மா என்னை எழுப்பினார். நான் எழுந்து என்னாச்சு என்று கேட்டேன் , அவர் இன்று உன்னுடைய பிறந்த நாள் , வனிதா கேக் வாங்கி கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி அதை வெட்ட சொன்னால், எனக்கு தெரிந்து இன்றுதான் குடுபத்துடன் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறேன். ஆனால் சிவா இன்னும் எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லவில்லை, அவர் மீது பயங்கர கோவத்தில் இருக்கிறேன் . மறுநாள் காலை எழுந்து வனிதாவும் நானும் கோவிலுக்கு சென்று விட்டு வந்தோம். வீட்டில் அம்மா சமையல் செய்து கொண்டிருக்க அந்த வாசனை தெரு வரைக்கும் வந்தது. பிறகு அம்மா என்னிடம் உடையை மாற்றி கொள் என்று ஒரு பார்சலை கொடுத்தார், அதை பிரித்து பார்த்தேன் ஒரு பட்டு புடவை இருந்தது, அதை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அம்மா என்னை பார்த்து சிரித்து கொண்டே என்னடி கயல் அப்படி பாக்குற எனக்கு இந்த விஷயம் எப்பவோ தெரியும் நீயாக வந்து சொல்வாய் என எதிர் பார்த்தேன் ஆனால் சொல்லவில்லை அதனால் நானே சொல்லலாம் என்று முடிவு செய்தேன், அமமா என்னிடம் இது கீர்த்தி உனக்காக வாங்கிட்டு வந்த புடவை pls கட்டிட்டு வா உன்னை புடவையில் பார்க்க ஆசையாய் இருக்கிறது என்றார். நான் வெட்கத்தில் தலை குனித்தேன். பிறகு உள்ளே புடவை கட்டி கொண்டு அம்மாவை அழைத்தேன் அவர் பார்த்து விட்டு என்னடி கயல் அச்சு அசல் பொம்பள மாதிரி இருக்குற , அழகா இருக்கிறாய் என்று சொல்லி முத்தம் கொடுத்தாள். பிறகு அறைக்குள் கீர்த்தி வந்தால் என்னை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள் அக்கா என்று சொன்னதும் எனக்கு அழகை வந்தது. நான் அவளை கட்டி பிடித்து கொண்டேன். பிறகு என்னை உட்கார வைத்து கீர்த்தி அலங்காரம் செய்து விட்டாள். கீர்த்தி என்னை அலங்கரித்து கொண்டு இருக்கும் போது அம்மா உள்ளே வந்தார், என்னிடம் கயல் உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கேன்,நீ என்னடி சொல்ற?.. என்றார். எனக்கு ஷாக்.ஏம்மா ..இப்படி பண்றே, என்றேன். உடனே கீர்த்தி அக்காகிட்ட என்னம்மா பேச்சு?..நீங்க ஏற்பாடு பண்ணுங்க என்றாள்.
கீர்த்தி நகைகளை எனக்கு அணிவித்தார்.என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின்,இரு கைகளிலும் தங்க வளையல்கள்,காலில் கொலுசு,காதில் குடை ஜிமிக்கி தோடு ,நெத்திசுட்டி எல்லாம் அணிவித்தார். என் கூந்தலில் பூக்கள் நிறைந்து இருந்தன. அம்மா என்னிடம் ஒரு தட்டு கொடுத்து வெளியில் உள்ளவர்களுக்கு கொடுக்க சொன்னால், நான் தயங்கி கொண்டே வெளியே சென்றேன் . வெளியில் சென்று பார்த்தேன் சிவாவும் அவருடைய அம்மாவும் உடக்கர்ந்து கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு டீ கொடுத்து விட்டு அறைக்கு வந்து விட்டேன். கீர்த்தி என்னை பார்த்து இந்த surprise எப்படி இருக்கு நான் தான் ஏற்பாடு செய்தென் என்றால், அவளிடம் ந்நன்றி சொன்னேன். பிறகு அம்மாவும் அவருடைய அம்மாவும் பேசி கொண்டிருக்க அவரை அழைத்து கொண்டு மேலே சென்றேன். கொஞ்ச பேசி கொண்டு இருந்தோம், திடிரென்று சிவா என் உதட்டில் முத்தம் கொடுக்க , நான் தடுக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை. அவர் என்னை விடாமல் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார், அப்போது வனிதா என்னை அழைத்து கொண்டு மேல வந்தால் அப்போது தான் அவர் விட்டார். சிவா போகும் போது என் இடுப்பை கிள்ளினார், வலியால் கத்தினேன் வனிதாவுக்கு புரிந்து விட்டது , அதை பற்றி கேட்காமல் சரி வாங்க அக்கா அம்மா கூப்பிடுகிறார்கள் என்று சொன்னாள். நானும் கீழே சென்றேன் நானும் வளும் கீழே சென்றோம். அவர்கள் எங்களின் திருமணம் தேதி முடிவு செய்து விட்டனர். இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு திருமணம் முடிவு செய்தனர். அம்மா என்னிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
அவர்கள் இருவரும் சென்றதும் , நான் அம்மாவிடம் என்னை உங்க மகளா ஏத்துகிட்டீங்களா இல்ல என் சந்தோஷத்துக்காக கயல்னு கூப்பிடுரீங்களா என்றேன். அதற்கு அம்மா இந்த குடும்பத்திற்காக நீ உன்னோட சந்தோஷங்கள் எல்லாத்தையும் இழந்துட்டடி எங்களுக்கு காக எவ்வளோவோ பண்ற நான் பண்ண கூடாத அதனால் தான் இனிமேல் என்னோட மூத்த மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். மனப்பூர்வமா உன்னை என் மகளா ஏத்துகிட்டேன்டீ கயல் என்று சொன்னார். நான் முழு பெண்ணாகிவிட்டேன்.என் அம்மாவும் பார்ப்பவரிடம் எல்லாம் நான் அவங்களோட மூத்த பொண்ணு என்று என்னை அறிமுகபடுத்தினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்படியே கொஞ்ச நாட்கள் ஓடியது.
Comments
Post a Comment