அன்று மாலை நன்றாக உறங்கி கொண்டு இருந்தேன் அப்போது யாரோ என்னை எழுப்பியது இருந்தது, யாரென்று பார்த்தால் சிவா அப்படியே எழுந்து உட்கார்ந்தேன். அவர் என்னை குளித்து விட்டு வர சொல்ல நானும் செய்தேன். என்னிடம் ஒரு புடவை கொடுத்து கட்டி கொண்டு வர சொன்னார் அதற்க்கு ஏற்ப ஜாக்கெட் ஒன்று இருந்தது அதை போட்டதும் பின்னாடி அப்படியே தெரிந்தது. அவர் எனக்காக செயின், கம்மல் மற்றும் வளையல் வாங்கிட்டு வந்திருந்தார் அதையும் போட்டு கொண்டு அவர் எதிரே நின்றேன். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலே சொல்லவில்லை. பிறகு அவர் என்னை கண் கட்டி அறைக்குள் அழைத்து சென்றார், அந்த அறை இருட்டாக இருந்தது.
பிறகு அவர் அறையின் லைட்டை ஆன் செய்தார். அப்போது என் அருகில் ஒரு டேபிள் அதன் மேல் இதய வடிவில் ஒரு கேக் இருந்தது. அதில் " I LOVE YOU KAYAL" என்று எழுதி இருந்தது. என் மனது மகிழ்ச்சியாகவும் இருந்தது.. என்னை பார்த்து கயல் எப்ப வருவா , என் காதல சொல்லனும்னு தவிச்சுகிட்டு இருந்தேனு சொன்னார். அவர் முட்டி போட்டு எனக்கு அவர் காதலை வெளி படுத்தினார், பிறகு என் விரலில் மோதிரம் போட்டு பிவிட்டார். அவர் முதல்ல கேக் கட் பண்ணு கயல்னு சொன்னார். நானும் அவரோட கையை காதலோட பிடிச்சுகிட்டு கேக் கட் பண்ணி அவருக்கு ஊட்டினேன். அவரும் எனக்கு ஊட்டினார்.கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு தூங்க சென்றோம்.
மறுநாள் காலை கயல் சீக்கிரம் ரெடியாகு செல்லம் நான் இன்னக்கி லீவ் போட்டுட்டென். நாம கோவிலுக்கு போயிட்டு அப்படியே வெளியே எங்கயாச்சும் போகலாம்னு சொன்னார். நான் சரிங்க ன்று சொன்னேன்.
அவர் ரெடியாகி கீழே காத்து கொண்டிருந்தார், நான் புடவை கட்டி கீழே வந்தேன், பிறகு வீட்டை பூட்டிட்டு வந்தோம். அவர்கூட BIKELA வெளியே போரத கற்பனை பண்ணிகிட்டே வந்தேன். ஆனால் அவர் கார் சாவிய எடுத்துகிட்டு வந்தார். எனக்கு பெரிய ஏமாற்றமாவும் ஷாக்காவும் இருந்தது. நான் உடனே பைக்கை ல போகலாம் இல்லை என்றால் நான் வர வில்லை என்றேன் , பிறகு அவர் சென்று பைக்கை சாவி எடுத்து வந்தார். கொஞ்சம் தூரம் போனதும்ரோட்டில் பள்ளம் மேடு இருந்தது, அதிள் குலுங்கி அவர் மீது இடிக்கும் ஒவ்வொரு முறையும் என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. நான் தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன் , அவர் வாங்கிட்டு வர சென்றார் அந்த பக்கம் பைக்கில் வந்த நான்கு பேர் அருகில் நின்று என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர், சிவா வந்ததும் அவர் கிட்ட சொன்னேன் ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் பைக்கை start பண்ணி போகலாம் என்றார். நான் எதுவுமே பேசாமல் பைக்கில் உட்கார்ந்தேன். நான் ரொம்ப கடுப்புடன் இருந்தேன். கொஞ்சம் தூரம் போனதும் என்ன ஆச்சு என் கயல் செல்லத்துக்குனு அவர்தான் முதலில் பேசினார். எங்கிட்ட பேசாதிங்கனு கோவமா சொன்னேன். ஏய் என்ன ஆச்சு உனக்குனு கேட்டார். நான் உங்க மேல கோவமா இருக்கேன்னு சொன்னேன்.
அவர் உடனே உனக்கு கோவம்கூட வருமா கோவப்பட்டாகூட அழகாதான் இருக்க கயல்னு சொன்னார். பிறகு அவர் இல்ல செல்லம் நான் சண்டை போட போய் நான்கு பேரில் ஒருவன் உன்னிடம் வந்து விட்டால் என்ன செய்வாய் அதனால் நான் எதுவும் செய்ய வில்லை என்றார். அப்பதான் அவரோட ஆழமான காதல இந்த பைத்தியக்காரிக்கு புரிஞ்சது. எனக்கு நான் விரும்பின ஒருத்தர் என் மேல இவ்வளவு அக்கறை கலந்த காதலுடன் இருப்பது கர்வமாக இருந்தது. நாங்க ரெண்டுபேரும் முதலில் கோவிலுக்கு சென்றோம். பிறகு சரவணாபவனில் காலை டிபன் சாப்பிடுட்டு CHENNAI CITY CENTERல் சினிமாவுக்கு போனோம். பிறகு ஷாப்பிங் செய்தோம். அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு வீட்டிற்க்கு வந்தோம். என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாக அது இருந்தது.
Comments
Post a Comment