மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றேன். பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போது நேற்று பார்த்த பெண் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தால் , என்னை பார்த்து அழைக்க எனக்கு பயமாக இருந்தது . நான் மெதுவாக சென்று அவள் அருகில் உட்கார்ந்தேன் அவளிடம் பேச தயக்கமாக இருந்தது , அவள் உடனே என்னடா கயல் எப்படி இருக்க என்று கேட்டது எனக்கு ஒரே அதிர்ச்சி இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று யோசித்தேன். அவள் உடனே ரொம்ப யோசிக்கதா நானே சொல்றேன் சொன்னால். என் பெயர் ரேவதி உன்னுடைய வகுப்பில் தான் படித்தேன், உனக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ஆனால் எனக்கு உன்னை நன்றாக தெரியும். நம்முடைய வகுப்பில் நன்கு படிக்கும் மாணவன் நீதான் , ஆனால் நீ யாரிடமும் பேசமாட்டாய் , அமைதியான பையன் சில நண்பர்களுடன் மட்டும் பேசுவாய் , அவர்களிடம் மட்டும் பழகியதால் என்னை எல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்ல , நான் உடனே அப்படியில்லை ரேவதி sorry சொன்னேன். அதற்கு அவள் பரவாயில்லை விடு 8 வருடம் ஆகிவிட்டது . அடுத்து அவள் என்னிடம் கயல் என்ன வேலை செய்கிறாய் , என்ன பிடிச்சிருக்க னு கேட்க, நானும் தயங்கி கொண்டு 10வது வரைதான் படித்தேன், குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடராமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் என்று சொன்னேன். ரேவதி அதற்கு sorry டா அது எனக்கு தெரியாது என்றாள் , நானும் சரி விடு என்றேன். மறுபடியும் என்னடா இது முடி தோள்பட்டை வரை வளந்திருக்கு வெட்ட வேண்டியது தானே என்றாள் , அதற்கு நான் இப்போது இல்லை இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு தான் என்றேன். அவள் ஏன் ஆறுமாதம் என்று கேட்க, நான் அவளிடம் என்னுடைய தங்கை கீர்த்தி 12வது படிக்கிறாள் , அவளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை அதனால் அவள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டி கொண்டேன் , ரிசல்ட் வந்த பிறகு தான் நான் மொட்டை அடிப்பேன் என்றேன். அவளும் ohh சரி என்று சொன்னாள். ரேவதி என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் கேட்கவா? என்று சொல்ல , அதற்க்கு என்ன ரேவதி தயங்காமல் கேளு என்றேன். அவள் அதற்கு " கயல் என்பது பெண்களுக்கு வைக்கும் பெயர் அதை ஏன் உனக்கு வைத்தார்கள் " என்று கேட்டாள், நான் அதற்க்கு " என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக் , எனக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் , அம்மாவின் பெயர் கயல்விழி, அம்மா இறந்த பிறகு அம்மாவின் நினைவாக அவரின் பெயரை எனக்கு வைத்து கொண்டேன் " என்று சொன்னேன். ரேவதி சிரித்து கொண்டே நீ ரொம்ப நல்ல பையாண்டா என்று சொன்னாள். நானும் சிரிதென், என்னுடைய கம்பெனி வந்ததும் நான் இறங்கி சென்று விட்டேன்.இன்று தான் முதல் சந்திப்பு ஆனால் இன்று சந்தித்தது போல தெரியவில்லை ரொம்ப காலம் பழகிய நண்பர்கள் போல பேசி கொண்டோம். அன்றிலிருந்து ரேவதி பேருந்தில் வரும் போதெல்லாம் எனக்கும் சேர்த்து இடம் பிடித்து கொண்டு வருவாள், நாங்கள் நன்றாக பழக ஆரபித்தோம். ரேவதி நல்ல தோழி போல பழகினாள் இருவருக்கும் தவறான எண்ணமில்லை...அவ்வப்போது அவள் என் தோற்றத்தை கிண்டலடிப்பாள் நானும் ஜாலியாக எடுத்துக்கொண்டேன்..இப்படியே ஒரு மாதம் ஓடியது.
ஒருநாள் நான் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டேன், என்னுடைய முடி பறந்து கொண்டே இருந்தது, ரேவதி விளையாட்டாக சடை பின்னி விட்டால் பிறகு என்னை பார்த்து என்னடி கயல் நாளையில் இருந்து நீ ஜடை போட்டு வாடி என்று சொன்னால், எனக்கு முகம் மாறியது , அதை புரிந்து கொண்ட ரேவதி sorry டா எனக்கு எல்லாமே பெண் தோழிகள் தான் அதனால் உன்னையும் அப்படி சொல்லிட்டேன் என்றாள், என்னால் திடிரென்று வாடா போடா என்று கூப்பிட முடியவில்லை என்றேன், அதுவரை வாடி போடின்னு கூப்டா என்று கேட்டால், நான் மெதுவாக தலை அசைத்தேன். .....அவள் என்னை பார்த்து கயல் நீ இருக்குற நிறத்திற்கு " நீ மட்டும் சேலை கட்டுன அசல் பொண்ணுதான்டின்னு சொன்னா" . நான் கோவத்தில் " நான் கட்டிக்கிறேன் குடுன்னு சொன்னேன் அவ என் கன்னத்துல செல்லமா தட்டி ச்சீ போடின்னு சொன்னால் " எனக்கு பயங்கர கோபமாக இருந்தது.
நாங்கள் நண்பர்களாக பழக ஆரபித்து 5 மாதங்கள் ஆகியது, இந்த ஐந்து மாதத்தில் நாங்கள் இருவரும் சொந்த கதைகளை பற்றி சொல்லி கொள்ளும் அளவிற்க்கு நெருங்கி விட்டோம் , எனக்கோ அவள் மீது காதல் வயபபட்டேன் அதை எப்படி அவளிடம் சொல்வது என தெரியாமல் தினறினேன். அப்படித்தான் ஒருநாள் எனக்குள் தைரியத்தை வரவைத்து கொண்டு அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன் அவளை அழைத்தேன், ரேவதி என்னை பார்த்து " என்னடி கயல் நீ என்னை காதலிக்கிறாய் அதை சொல்ல தான் இப்படி யோசிக்கிறாயா என்று கேட்டாள்" எனக்கு ஒரே அதிர்ச்சி மறுபடியும் அதற்கான பதிலை நான் நாளை சொல்கிறேன் என்றேன் சொன்னால். அன்று மாலை அவள் என்னிடம் ஒரு பார்சலை என்னிடம் கொடுத்து நாளைக்கு இந்த உடையை போட்டு கொண்டு வா என்று சொன்னாள். நானும் சரி என்று சொன்னேன்.
அன்று இரவு வீட்டிற்க்கு சென்று அந்த பார்சலை பிரித்து பார்த்தேன் அது ஒரு டீ-shirt , அப்படியே மடித்து வைத்து விட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் ரேவதி என்ன சொல்வாளோ என்று பயமும் , இன்னொரு பக்கம் சந்தோஷமாக இருந்தது. நான் குளித்து விட்டு அந்த T-shirt எடுத்து போட்டேன் அது மிகவும் இறுக்கமாக இருந்தது , என்னுடைய மார்பகம் பெண்களை போல தூக்கி கொண்டு நிற்கிறது, இதை அணியாமல் சென்றால் ரேவதி என்ன சொல்வாளோ என்று நினைத்து கொண்டு வேறு வழி இல்லாமல் அணிந்து கொண்டேன். என்னை பார்த்ததும் சித்தி மற்றும் கீர்த்தி கிண்டல் பண்ணினார்கள், வேறு உடைய போட்டு போக சொன்னார்கள், நான் அவர்கள் பேச்சு கேட்காமல் கிளம்பி சென்றேன். பேருந்தில் ஏறி விட்டு ரேவதியை தேடினேன் , ஆனால் அவள் இல்லை. என்னுடைய முகம் வாடி போனது , சோகமாக ஓரிடத்தில் நின்றேன்.
Comments
Post a Comment