எனக்கு இப்படி நிலைமை வரு என்று நான் எதிர்பார்க்காவே இல்லை . என்னுடைய தலைவிதி இப்படியான இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டு கொண்டிருக்க , அப்போது அங்கு வந்த அம்மா இப்போது அதையெல்லம் நினைக்காதே என்று சொல்லி என்னிடம் பாலை கொடுத்து குடிக்க சொன்னார் .நான் பாலை குடித்து விட்டு மெத்தையில் படுத்து கொண்டே என்னுடைய வாழ்க்கையின் பின்னாடி சென்றேன்.
என் பெயர் விஜய் , என்னுடைய அம்மா( லட்சுமி ) அப்பா( கணேஷ் ) காதலித்து திருமணம் சையது கொண்டார்கள். என்னுடைய தாத்தாவிற்கு அம்மாவின் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை அதனால் அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்கள். என்னுடைய அம்மாவிற்கு கல்யாணம் நடக்கும் போது அவருக்கு 21 வயது, அப்பாவிற்கு 28 வயது . அப்பா அம்மாவை கல்யாணம் செய்த பிறகு நன்றாக தான் பார்த்து கொண்டார்.இருவரும் அளவுக்கு அதிகமாக காதலிக்கிறார்கள் . எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் அவன் பெயர் விக்கி .
என் அப்பா கணேஷ் ஒரு பிரைவேட் கம்பெனியில் மானேஜராக இருந்தார் கூடவே ஒரு பிசினெஸ் செய்கிறார். என் அண்ணன் பிறந்த பிறகு அப்பாவிற்கு பிசினஸில் நல்ல லாபம் , நிறைய பணம் வந்தது. அதனால் அவருக்கு அவனை பிடிக்கும். என்னுடைய அம்மா பெயர் மட்டும் லட்சுமி இல்ல உண்மையிலேயே பார்க்க அழகா இருப்பாங்க , நல்ல நிறம் , குணம் எல்லாம் இருக்கும் ஒரு தேவதை. அம்மா கல்யாணத்திற்கு பிறகு படித்து ஒரு டீச்சராக பணியாற்றுகிறார் . . நான் பிறக்கும் போது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டது . அதன் பிறகு அப்பா வேலையை விட்டு முழுவதுமாக பிசினில் இறங்கினார். அம்மா கூட திட்டினார்கள் ..ஏன் வேலைய ரிசைன் பண்ணிட்டீங்கன்னு ..அப்பா ஏதோ மழுப்பினார் ..பின் தனியே நண்பர்களோடு சேர்ந்து சொந்த பிசினஸ் செய்கிறேன் என்று ,அம்மாவின் நகையை வாங்கி விற்று துணிக்கடை ஆரம்பித்தார் ,,கொஞ்ச நாளில் அது நஷ்டம் ஆகியது ..நண்பர்கள் அப்பாவை ஏமாற்றி கடையை மூடிவிட்டு பணத்துடன் போய்விட்டனர் ..மறுபடி அவர் செய்த இரண்டு பிஸிநெஸ்களும் நஷ்டத்தில் முடிந்தன..அப்பா அம்மாவிடம் இவன் பிறக்கும் போதே எனக்கு விபத்து ஏற்பட்டது . இப்போ நான் எந்த பிசினெஸ் பண்ணாலும் நஷ்டத்தில் போகுது , அதனால் அவன் நமக்கு தேவையில்லை . இவனை யாருக்காவது தத்து கொடுக்கலாம் என்று சொல்ல அம்மா அழுது கொண்டே என்னை தூக்கி கொண்டு என்னால் என் குழந்தையை கொடுக்க முடியாது என்றால். அதன் பிறகு 3 மாதங்களுக்கு என்னால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது . ஒருநாள் அப்பா என்னை தூக்கி வேறு ஒருத்தருக்கு தத்து கொடுக்க, இதை தெரிந்து கொண்ட அம்மா , அவரிடம் சண்டை போட்டு இரவோடு இரவாக என்னை தூக்கி கொண்டு தாத்தா இருக்கு கிராமத்திற்கு வந்துவிட்டார்.
Comments
Post a Comment