Sunday, 13 February 2022

கயல் விழி - part -6

 நானும் வனிதாவும் கோவிலுக்கு வெளியே சென்று நின்றோம் ,  அவர் என் எதிரில் நின்று அவரை பற்றி சொல்ல ஆரம்பித்தார். என்  பெயர் சிவா. வயது 30. சென்னையில் பெரிய MNC கம்பெனியில்  கணிப்பொறி  மேலாளராக பணியாற்ருக்கிறேன். என்னுடைய சம்பளம் மாதம் 1 இலட்சம்.  சென்னையில் கிண்டி என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வாடகைக்கு தங்கி இருகிறேன். எனது  சொந்த ஊர் சேலம் . சேலம் நகரின் பேரூந்து நிலையத்திற்க்கு அருகில் தான் என்னுடைய  வீடு. எனக்கு  அப்பா இல்லை , அம்மா மற்றும்  ஒரு தங்கை இருந்தனர்.  கொஞ்சம் வசதியன குடும்பம் என சொல்லி கொண்டே போக,  நான் இடையில் அவரை பார்த்து எதற்கு இப்போது உங்களை பற்றி என்னிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் " கயல்  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி so, straight ஆகவே கேட்கிறேன் என்ன marriage பண்ணிக்றியா?? என கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது, வாய்க்கு வந்த படி அவரை திட்டி விட்டு கிளம்பினேன். அவர் என்னிடம் உன் அழகை பார்த்து மட்டும் அல்ல , உன்னுடைய குணமும் எனக்கு பிடிக்கும் , குடுபத்திற்கும் எதுவும் செய்ய துடிக்கும் பையன் அதனாலேயே என்னமோ நீ பையனா இருந்தா கூட உன் மீது எனக்கு காதல் வந்ததிருக்கு என சொன்னார். மறுபடியும் என்னை பார்த்து கடைசியாக நீ எனக்கு ஒரு help பன்னு உன்னை இனிமே disturbe பண்ண மாட்டேன்'' என்றான்

- நான் என்ன help செய்ய வேண்டும் கேட்டேன். 

- only one kiss '' என்றான்.

- இதற்குமேல் அவனிடம் பேச விரும்பாமல் அந்த இடத்தை விட்டு செல்ல முயன்றேன். ஆனால், அவன் என் கையை இழுத்து பிடித்து இழுத்து என் உதட்டில் முத்தம் கொடுத்தான் என்னால் அவனை தடுக்க முடியவில்லை கொஞ்ச நேரம் கழித்து என்னை விட்டான், நான் என் உதட்டை துடைத்து கொண்டு அவனை அறைந்தேன். பிறகு அவன் விசிட்டிங் கார்ட் என்னிடம் கொடுத்தார். இன்னொன்றை என் பேண்ட் பாக்ட்டில் வைத்தார். நான் வேகமாக கிளம்பி சென்றேன்.  வனிதவிடம் இதை பற்றி யாருடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டேன். அவளும் சரி என்று சொன்னாள். 

நாங்கள் கீர்த்தியின் உயர்கல்வி பயில விண்ணப்பித்த போது அவளுக்கு  அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க   MERRITல் தேர்வு பெற்றால். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவளுக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்ததால், என் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கீர்த்தியை கல்லூரியில் சேர்க்க அழைத்து சென்றோம் ஆனால் கல்லூரி முதல்வர் என்ன தான் merit சீட் என்றாலும் நீங்கள் 5 லட்சம் கட்ட வேண்டும் சொல்ல எங்களுக்கு இடி பொல் இருந்தது. நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர் ஒப்பு கொள்ளவில்லை. எங்களுக்கு ஒரு வாரம் time கொடுத்தார் அப்படி இல்லை என்றால் இந்த சீட்டிற்கு 20 லட்சம் கொடுக்க ஆள் இருக்காங்க அவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்றார். 

நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் எங்களால் 1.50 லட்சம் ஏற்பாடு செய்ய முடிந்தது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு , இதற்கிடையில் அப்பாவுக்கு வேற விபத்து ஏற்பட்டு அவரை மருத்துவ மனையில் சேர்த்து விட்டோம் . அவருக்கு ஆப்ரேஷன் செய்ய 1 லட்சம் ஆகும் என்றனர். கீர்த்தி எங்களிடம் நான் வேரா ஏதாவது கல்லூரியில் வேற படிப்பை படிக்கிறேன் என்றாள். அன்று இரவு நாங்கள் தூங்கி விட்டோம், சித்தி மருத்துவ மனைக்கு சென்று சாப்பாடு கொடுத்து விட்டு வந்தார் , திடிரென்று சித்தி கத்தினாள் எழுந்து பார்த்தால் கீர்த்தி தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். கீர்த்தியை தடுத்து சித்தி அவளை கட்டி பிடித்து அழுது கொண்டிருக்க எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கீர்த்தி இந்த ஏழ்மையான குடுபத்தில் பிறந்து இப்படி பிடித்த படிப்பை படிக்க முடியாமல் தவிப்பதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை..

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...