மறுநாள் கவிதா வீட்டுக்கு சென்றேன், அவர் என்னை பார்த்து என்னடி கயல் நேற்று சந்தோழமாக வெளியே போய்ட்டு வந்த போல என்றேன், நானும் ஆமாம் என்றேன். பிறகு நான் அவளிடம் கவிதா எனக்கு தேவையில்லாத முடியை அகற்ற வேண்டும் treatment எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றேன் . அதற்க்கு அவள் அதெல்லாம் வேண்டாம் நான் மருந்து சொல்கிறேன் அதை வாங்கி use பண்ணு, ஓரு ஆறு மதத்திற்குள் முடியே இருக்காது, வளரவும் வளராது என்றீர். நானும் அதை வாங்கி use பண்ண ஆரம்பித்தேன்.
ஒருநாள் சிவா எனக்கு போன் செய்து அவருடைய துணிகளை எடுத்து வைக்க சொன்னார் , நான் எதற்ற்கு என்றேன் அவர் அப்பா ஏதோ முக்கியமான விஷயம் நீ இல்ல இந்த பண்ண முடியாது சொன்னார் , கேட்டதும் அதிர்ச்சி என்ன செய்வது என்று தெரியாமல் போனை கட் செய்து விட்டேன். நான் சிவாவிற்ற்கு கல்யாணம் செய்ய போரங்களோ என கற்பனை செய்து கொண்டேன் , அவ்வளவுதான் அன்று முழுவதும் நானாக இல்லை. மாலை சிவா வீட்டிற்க்கு வந்தார், நான் அவரிடம் என்னங்க மாமா அவசரமா வரசொல்லுரார் ஏதாவது பெரிய பிரச்சினையா என்றுக் கேட்டேன். தெரியல கயல் , ஏதோ வரன் வந்திருப்பதாக சொன்னார் , நான் போய் என்னனு பாத்துட்டு உனக்கு ஃபோன் பண்ரேன். நீ பயப்படாம இருடி செல்லம்னு சொல்லி என்னைக் கட்டிப்பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டார். நான் கட்டிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் நீ எதுக்கு அழுகுரேனு தெரியும். கவலைபடாத கயல் என்ன நடந்தாலும் நீ தான்டி என் பொண்டாட்டி இதில மாற்றமே இல்லனு சொன்னார். நான் வரும் வரை பத்திரமாக இரு செல்லம்னு சொல்லிட்டு சென்றார். பிறகு அவர் என்னிடம் ஒரு டிக்கெட் கொடுத்து நீயும் ஊருக்கு போய் அம்மாவை , தங்கைகளை பார்த்து விட்டு வா என்று சொன்னார். வீட்டிற்கு செல்கிறேன் என்ற மகிச்சி கூட இல்லை , நானும் கிளம்பி வீட்டுக்கு போனேன். வீட்டிற்க்கு போக லேட்டா ஆயிடுச்சி அதனால் காலை நன்றாக உறங்கிவிட்டேன். என் காது மற்றும் மூக்கு குத்தி இருப்பது தெரியாமல் இருக்க என்னுடைய நிறத்தில் ஒரு கிரீம் தடவி கொண்டேன். அது தடவி கொண்டதால் முழுவதும் இல்லாமல் கொஞ்சம் மறைந்தது. மறுநாள் காலை தூக்கி எழுந்து பார்த்தேன் , சிவா எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார், வரன் வந்திருப்பது தங்கைக்கு என்று அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது.. அப்போது அம்மா உள்ளே வந்தார் என்னிடம் அருகில் உட்கார்ந்து எப்படி இருக்க என்று கேட்டார், நான்றாக இருக்கிறேன் என்றேன். பிறகு குளித்து விட்டு வந்தேன் , அம்மா எனக்கு தலை செவி விட்டு, என்னடா கயல் உனக்கு 26 வயசு ஆகுது இன்னும் மீசையும் தாடி வரவே இல்லை, உன்னுடைய கண்ணகங்கள் அப்படியே பலபளக்குது என்று கேட்டார், சமாளிக்க முடியாமல் தினறினேன். பள்ளி முடிந்ததும் வனிதா வீட்டிற்க்கு வந்தாள், என்னை பார்த்ததும் அவளுக்கு ஒரே சந்தோஷம். என்னை விட்டு பிரியவே இல்லை , பேசி கொண்டே இருந்தாள். வனிதா என்னை அக்கா என்றே கூப்பிட ஆரம்பித்தாள் , எப்படி இருந்தாலும் அவளுக்கு என்னை பற்றி எல்லாமே தெரியும் அதனால் என்னை பற்றி அவளிடம் சொன்னேன். வீட்டில் ஒரு வாரம் இருந்தேன் , கீர்த்தி என்னிடம் எப்போ வந்த , என்ன பண்ற சாப்பிடிய இல்லையா என்று ஒரு வார்த்தை கூட கேக்கலா, நான் ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு செள்வாள்.
நானும் சென்னைக்கு கிளம்பி சென்றேன், சிவாவும் சென்னைக்கு வந்துவிட்டார். நானோ சென்னைக்கு சென்றதில் இருந்து அமைதியாக இருந்தேன். சிவா என்னிடம் என்ன செல்லம் வீட்டுக்கு போய்ட்டு வந்ததில் இருந்து இப்படியே இருக்கிறாய, பிறகு உன் மனசுல என்ன இருக்கும்னு னக்கு தெரியும் , உன்ன எப்ப கல்யாணம் கட்டிக்கப்போர எனக்கு தெரியாதானு சொன்னார். நான் உண்மையா என்னைக் கல்யாணம் பண்ணுக்குவீங்களா இல்ல நான் சந்தோஷமா இருக்கணும்ணு சொல்ரீங்களானு கேட்டேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன். இது சத்தியம் என்ன நம்பு செல்லம் சொன்னார். நான் அதற்க்கு எப்படிங்க அது நடக்கும் நான் மனசால ஒரு பொண்ணா இருந்தாலும் நான் உடலால ஆண் தானே. இந்த சமூகம் நம் கல்யாணத்த ஏத்துக்குமா முதல்ல நம்மள பெத்தவங்களே ஏத்துக்க மாட்டாங்க. நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு ஒரே மகன்நெனச்சா ஆனால் உங்களுக்கு 2 தங்கைகள் இருக்காங்க, நாம கல்யாணம் பண்ணிகிட்டா அது உங்கலோட தங்கச்சியோட வாழ்க்கையையும் பாதிக்கும். உங்க அம்மா அப்பாவுக்கு அவங்களோட குடும்ப வாரிச கொஞ்சணும்னு கனவெல்லாம் இருக்கும். அத நிறைவேத்த வேண்டியது உங்க கடைமை நீங்க ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழனும் அது போதும் மாமா எனக்கு நான் சாகுர வரைக்கும் உங்கள நினைச்சுகிட்டே வாழ்ந்துடுரேனு சொன்னேன். அவர் என் கன்னத்தில் அறைந்து விட்டு அதுக்கா உன்னை விரட்டி விரட்டி காதலிச்சேன் இன்னொரு அப்படி பேசாதே என்று சொல்ல, நான் அழுதேன் என்னை இறுக்கமாக கட்டி கொண்டார். நானும் அவரை இறுக்கமாக கட்டி கொண்டேன். உன் திருப்திக்காக சொல்லல செல்லம் நீ இல்லாத வாழ்க்கைய நான் நினைச்சுகூட பாக்கல, நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றார். பிறகு சிவா என்னிடம் வாரத்திற்ற்கு ஒரு முறை நாம் வெளியில் செல்லலாம் என்று சொன்னார் நானும் சரி என்று சொன்னேன். அன்று இரவு அப்படியே பைக் எடுத்து கொண்டு திருவான்மியூரை தாண்டி ECRல் சென்றோம். மாமா வேகமாக வண்டி ஓட்ட அவரை பின்னால் இருந்து கட்டியணைத்து என் வருங்கால கணவருடன் காதல் வானில் சிறகடித்து பறந்துக் கொண்டு இருந்தேன். இதே போல ஒவ்வொரு வாரமும் வெளியில் சென்றோம்.சிவா என் வங்கி கணக்கில் பணத்தை போடுவதாக சொன்னார், அது என் அனைத்து தேவைகளையும் வைத்து கொள்ள சொன்னார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாக இருந்தன. ஒரு வாரம் சினிமா அடுத்த வாரம் பீச் அதற்க்கு அடுத்த வாரம் ஏதேனும் தீம் பார்க் என்று அனுபவித்து வந்தோம். அவர் தங்கை திருமணம் தேதி நெருங்கி கொண்டு இருப்பதால் இவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. திருமணத்துக்கு வேலை செய்ய இவரை தவிர வேறு யாரும் அது எனக்கு புரிந்தது அதனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
Comments
Post a Comment