அம்மா என்னிடம் உன்னோட மேரேஜ் முடியாம நீ எங்கேயும் வெளியே போகாதடி என்றார்.நாட்கள் போயின.ஆச்சு ஒருவழியாய் நாளைக்கு கல்யாணம் நாங்கள் கிளம்பி மண்டபத்துக்கு சென்றோம்.நான் உள்ளே செல்லும் போது பார்த்தேன் , மாப்பிள்ளைக்கு கொடுக்க பல்சர் பைக்கை வாங்கியிருக்கிறார் என்று இதை பற்றி அம்மா என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. இப்போது தான் எனக்கு தெரிகிறது , நான் அம்மாவிடம் சென்று இதை பற்றி கேட்டேன் , அதற்க்கு அவர் வழக்கமா பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு கொடுப்பது தான் என்றார். நான் கோவமாக அவரை பார்க்க , என் அருகில் வந்து கல்யாண பொண்ணு இப்படி இருக்க கூடாது என்று சொல்ல, நான் அழுதேன் அவர் உடனே என் கண்ணை துடைத்து விட்டு என்ன நடந்தது என்று சொல்கிறேன், இதற்கும் மாப்பிள்ளைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். பிறகு ஏன் கொடுக்கிறீர்கள் என்றேன், அதற்கு அம்மா இல்லாம சிவா அப்பா ஒருநாள் நம்ம வீட்டிற்கு வந்தார். அவர் என்ன சொன்னார் என கேட்டேன் , அம்மா தயங்கினாள் . அவரிடம் நீங்கள் சொல்கிறீர்களா இல்லை அவரிடமே சென்று கேட்கவா என்று கேட்டேன், அம்மா நானே சொல்கிறேன் என்றார்.
ஒருநாள் சிவாவின் அப்பா நம்முடைய வீட்டிற்கு வந்தார், அவர் என்னிடம் இங்க பாருங்க அம்மா எண் மனைவியும் என் மகனும் என்ன பேசினார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. நான் சொல்வதை கேளுங்கள், என் பையனுக்கு என் தங்கை மகளை திருமண செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் அவன் உங்கள் மகளை காதலித்து விட்டான். நான் வேறு எங்காவது பெண் பார்த்திருந்தால் அவன் செய்யும் வேலைக்கும் , அவன் வாங்கும் சம்பளத்திற்கும் 50 சவரன் நகை மற்றும் ஒரு பல்சர் பைக் கேட்டு இருப்பேன். , இது காதல் கல்யாணம் அது மட்டுமில்லாமல் அவன் விருப்ப பட்டுட்டான் அதனால் 10 சவரன் நகை மற்றும் ஒரு பல்சர் பைக்கை கொடுங்கள் என்றார். நான் என் மகளை கேட்டு சொல்கிறேன் என்றேன். அவர் போட்ட முதல் நிபந்தனை உங்களிடம் சொல்ல கூடாது என்பதுதான். அம்மா என்னிடம் இப்போது 5 சவரன் ரெடி பண்ணிட்டேன் ஆனால் மீதி என்ன பண்றது என தெரியவில்லை என்று சொல்ல, நான் அம்மாவிடம் நான் இருக்கும் போது நீங்க எதுக்கு பயப்படனும் நான் பார்த்து கொள்கிறேன் என்றேன். எனக்குள் ஒரு நிம்மதி எப்படியும் நகைகள் என்னிடம் தான் இருக்கும் கல்யாணத்திக்கு பிறகு கொண்டு வந்து கொடுக்கலாம் என்று, அம்மாவை சமாதானம் செய்து அனுப்பினேன்.
அன்று மதியம் நான் அறையில் படுத்து கொண்டு இருக்கும் போது அம்மா எனக்கு கால் பண்ணினார். என்ன என்று கேட்டேன் அவர் அதற்கு உன்னுடைய மாமனார் கால் பண்ணி மீதி 5 சவரன் நகையை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உன் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று சொன்னதாக சொன்னார். நான் அம்மாவிடம் சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னேன். நான் என் மமானாரிடம் ஸ்3ன்று இதை பற்றி கேட்டேன் , அவர் அதற்கு என் தங்கை மகளை திருமணம் செய்ய நினைத்தேன் ஆனால் என் மகன் உன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான் பரவியில்லை ஆனால் நீ வேறு ஒரு ஆணை கல்யாணம் செய்தால் வரதட்சணை கொடுத்திருப்பாய் அல்லவா அதைத்தான் நான் கேட்க்குறேன் என்றார். நான் அவரிடம் இனிமேல் நான் எதையும் கொடுக்க மாட்டோம் என சொன்னேன் அதற்கு அவர் கோபமாக என் மகனிடம் இருந்து உன்னை பிரித்து என் தங்கை மகளை திருமணம் செய்வேன் என்று சொல்ல , நானும் கோபத்தில் முடிந்தால் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
Comments
Post a Comment