அன்று முழுவதும் நான் கொஞ்சம் disturbed இருந்தேன். மாலை கம்பெனி விட்டு வெளியே போகும் போது , ரேவதி நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் வந்து soory டி காலையில என்னால் வர முடியவில்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்டால், நானும் சரி. என்று சொன்னேன். அவள் சாப்பிட ஓட்டலுக்கு போகலாம் அதற்கு முன் சில வேலைகள் இருக்கு என சொல்லி என்னை அழைத்து கொண்டு சென்றாள். ரேவதி என்னை அழைத்து கொண்டு சலூன் க்குள் செல்ல , நான் எதற்கு என்றேன், ஒன்றுமில்லை என்று சொல்லி நாற்காலியில் உட்கார வைத்து என்னுடைய தாடியை அகற்ற சொன்னாள். நான் வேண்டாம் என்று கெஞ்சியும் அவள் கேட்கவில்லை வேறு வழியின்றி ஒப்பு கொண்டேன். தாடி எடுத்த பிறகு ரேவதி பார்த்ததும் என்னிடம் இவ்வளவு அழகான முகத்தை எதுக்கு தாடிக்குள் ஒளித்து வைத்து இருந்தாய் என சொல்லும் போதே, எனக்கே என் முகத்தை பார்க்க ஆர்வம் வந்தது. காண்ணாடியில் என் முகத்தை பார்த்ததும் எனக்கே என்னை பிடித்தது பிறகு ரேவதி என்னிடம் இனிமேல் இப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள். நானும் சரி என்று சொன்னேன் . பிறகு இருவரும் கிளம்பி சாப்பிட சென்றோம், நான் காலையில் நடந்ததை ரேவதி யிடம் சொன்னேன், கேட்டதும் அவள் சிரித்து விட்டு என்னை கிண்டல் செய்தாள். நாங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காலையில் பேருந்தில் பார்த்த அந்த பையன் வந்தான், நான் அவனை ரேவதிக்கு காட்டினேன், அவள் அவனிடம் கேட்கவா என கேட்டாள், நான் வேண்டாம் என்றேன். சாப்பிட்டு கை கழுவ செல்லும் போது அவனும் என் பின்னால் வந்து நின்று இந்த எனக்கு பிடித்திருக்கிறது , நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னார், நான் பதில் ஏதும் சொல்லாமல் வந்தேன். நானும் ரேவதியும் வீட்டிற்க்கு கிளம்பினோம் , அவள் வீட்டிற்க்கு சென்றால் ,நான் என் வீட்டிற்கு வந்தேன்.
நான் வீட்டிற்குள் சென்றதும் கீர்த்தி என்னை பார்த்ததும் அம்மா இங்க வாங்க என சித்தியை அழைத்தால், நான் எதற்கு இவள் சித்தியை அழைக்கிறாள் என்ற சந்தேகத்தில் இருந்தேன். சித்தி வந்ததும் " கீர்த்தி அவரிடம் இங்க பாருங்க இவள் என்ன பண்ணிட்டு வந்திருக்கணு , அதற்க்கு சித்தி ' கீர்த்தியிடம் என்னடி ஆச்சு கேட்டு என்னை பார்க்க, பார்த்து விட்டு கீர்த்தியிடம் அவளுக்கு பொட்டு நல்லா தான் இருக்கு பார்க்க பொண்ணு மாதிரி தான் இருக்கா என சாதாரணமாக சொன்னாள். என்ன பொட்டு என சித்தி ஏதோ சொல்கிறாள் என்று யோசித்து கொண்டு கண்ணாடியை பார்த்தேன், எனக்கு அதிர்ச்சி என் நெற்றியில் பெண்கள் வைக்கும் பொட்டு உடனே அதை எடுத்து போட்டேன். உடனே கீர்த்தி என்னை பார்த்து கயல் அது உனக்கு நல்லா தாண்டி இருந்துச்சு என சொல்லி கிண்டல் பண்ணால், நான் உள்ளே சென்று உடையை மாறறி கொண்டு வந்து tv பார்த்தேன்.
மறுநாள் வழக்கம் போல கம்பெனி கிளம்பினேன். கீர்த்தி என்னிடம் கயல் இந்தாடி இந்த பொட்டு நல்லா இருக்கு என சொல்லி ஒரு பொட்டு கொடுக்க வனிதா வந்து அதை பிடிங்கி போட்டால், பிறகு அண்ணாவை எதற்கு இப்படி கிண்டல் பண்ணுகிறீர்கள் என்று அவளை கேட்ட்டால், நானும் வேலைக்கு கிளம்பி விட்டேன். அன்று அவர் அந்த பேருந்தில் இல்லை என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பிறகு நான் ரேவதி அருகில் சென்று உட்கார்ந்து கொண்டேன். இப்படியே வாழக்கை நன்றாக சென்றது , ஒருநாள் என் சித்தியும் , கீர்த்தியும் கோவிலுக்கு சென்று விட்டு வந்து , வீட்டில் இருக்க பார்க்க கொஞ்சம் பதட்டமாக இருந்தார்கள் , நான் வனிதாவை அழைத்து கேட்டேன் . வனிதா இன்று அக்காவுக்கு result வருகிறது என்றால், எனக்கும் அவளுடைய result ஐ பார்க்க ஆவலாக இருந்தேன். result வந்து விட்டது கீர்த்தி 1200க்கு 1167 எடுத்திருந்தால், எனக்கு மிகவும் சந்தோஷம் எப்படியும் அவள் ஆசை படி மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்று நினைத்து கொண்டேன். அன்று மாலை நான் வனிதாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றேன், நான் வேண்டி கொண்டது போல இடம் கிடைத்ததும் மொட்டை அடிகிறேன் என வேண்டி கொண்டேன். பிறகு வெளியே வரும் போது அன்று பேருந்தில் பார்த்த அவர் வந்தார் , என்னிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்றார். நான் முடியாது என்றேன் ஆனால் அவர் விடவில்லை கெஞ்சி கேட்டதால் நான் ஒப்பு கொண்டேன்.
Comments
Post a Comment