சிவா ஊருக்கு சென்ற பிறகு அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. செல்லம் வீட்டுக்கு வந்துட்டேன்.உனக்கு நைட் 11 மணிக்கு .ஃபோன் பண்றேநு சொன்னார். அதன் பிறகு மூன்று நாட்களாக எந்த ஃபோனும் வரவில்லை. நான் பண்ணாலும் அவருக்கு போகல. எனக்கு என்ன பண்ரதுனே தெரியல. 2 மணி நேரம் கழித்து போன் செய்தேன் , இந்த முறை ரிங் ஆனது அவர் அட்டெண்ட் பண்ணவேயில்ல. எனக்கு ஒரே பதற்றமா இருந்துச்சு. இன்னொரு முறை முயற்சி செய்தேன் அப்போது யாரோ பெண் குரல் கேட்டது, அது அவருடைய தங்கை என்று நினைத்தேன், பிறகு அவளிடம் சிவாவை பற்றி கேட்டேன், அதற்கு அவள் அண்ணன் அவருடைய கல்யாணத்தை பற்றி பேசி பிகொண்ட இருக்கிறார் என்று சொல்ல, பதற்றத்துடன் பெண் யாரு என கேட்டேன், எங்களுடைய உறவினர் பெண் தான் என்று சொன்னதும் அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டேன். வேற எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டேன். நான் அழுதுகிட்டே இருந்தேன். என் காதல் அவ்வளவுதான் முடிஞ்ச்ப்போச்சுனு மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டு கடைசியில ஏமாத்திட்டாரேனு புலம்பிக்கிட்டிருந்தேன். பிறக்கும் போதே பொண்ணா பிறந்தவங்களயே இந்த ஆண்கள் காதலித்து ஏமாத்தும் போது ஒரு ஆணாக பிறந்து மனசால மட்டுமே பெண்ணா இருக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னத நம்பி மனசுல ஆசைய வளர்த்து ஏமாந்தது என் தபபுதானு ஒரு பைத்தியம் போல புலம்பினேன். நான் என்னுடைய போனை off செய்து விட்டு படுத்து விட்டேன். அதன் பிறகு மறுநாள் தான் என்னுடைய போனை பார்த்தேன் . எடுத்து என்னுடைய போனை on செய்தேன் சிவாவிடம் இருந்து 10 கால்ஸ் மற்றும் அம்மாவும் 5 முறை கால் பண்ணிருக்கிறார். நான் அம்மாவிற்கு கால் பண்ணினேன் அவர் என்னிடம் சிவா தங்கச்சிக்கு கல்யாணமாம் போன் பண்ணி சொன்னார் , என்னால் வர முடியாது அதனால் வனிதாவை அனுப்புகிறேன், நீ அவளை பார்த்து கொள் என்று சொன்னாள், நான் திருமணத்திற்கு போகமாட்டேன் எப்படி அவர்களுக்கு புரியும் படி சொல்றதுன்னு தெரியவில்லை. அப்படியே குழப்பத்துடன் கவிதா வீட்டிற்கு சென்றேன். கவிதவிடம் நடந்ததை சொன்னேன் , அதற்க்கு அவள் நீயாக எதையும் கற்பனை செய்யாதே நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள் , உனக்கக அவர் சண்டை போட்டிருந்தாள் என்ன செய்யவாய், அதனால் கல்யாணத்துக்கு போய்ட்டு அதன் பிறகு முடிவு செய்து கொள் என்றாள். நானும் இது நல்ல ஐடியா தான் என்று அதையே பண்ணலாம் என்று நினைத்தேன். நான் அவருக்கு கால் பண்ணினேன், அவர் எடுத்ததும் என்னடி போன் பண்ண எடுக்கலா, சரி அது விடு வர ஞாயிற்றுக்கிழமை கல்யாணம். நீயும் கட்டாயம் இங்க இருக்கனும்னு அதனால கிளம்பி வா என்றார். என்னோட ஃபோன் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன் அதுவும் இல்லாம இங்க ஒரே டென்ஷன். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அப்பாவுக்கும் ஷுகர் பிளட்பிரஷர் அதிகமாயிட்டு மயக்கமாகி விழுந்துட்டார். டாக்டரும் அப்பாவ கண்டிப்பா நீங்க ரெஸ்ட் எடுத்தே ஆகனும் எந்த டென்ஷனும் இருக்க கூடாதுனு சொல்லிட்டார். அதனால எல்லா வேலயும் நான் ஒருத்தனே செய்ய வேண்டியதா இருக்கு. கல்யாணம் கூட வீட்டிலயே சிம்பிளா பண்ணலாம் கல்யாணத்துக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் கூப்பிட்டிருக்கோம் என்று சொன்னார், சரி வரேன்னு சொன்னேன்.
நான் என் நார்த்தனாரின் குடுபத்துடன் வர வேண்டியது ஆனால் தனியாக செல்கிறேன். நான் வாழப்போகும் வீட்டில் என் முதல் அடியை வலது காலை எடுத்து வைத்து நுழைந்தேன்.நான் அவர் வீட்டிற்கு சென்றதும் எப்படி பேசுவது என யோசித்து கொண்டே சென்றேன் ஆனால் அங்கு உள்ளே சென்றவுடன் அவரின் அம்மா என்னை பார்த்ததும் என்னம்மா கயல் இவ்ளோ லேட்டா வரது, அப்போது அங்கு வந்த சிவாவின் இரண்டாவது தங்கை சீதா என்னை பார்த்து அண்ணி எப்போது வந்திர்கள் என்று கேட்க எனக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு சிவா வந்தார் என்ன நடக்குது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன் அப்போது உள்ளே வந்த சிவா என்னை குளித்த விட்டு வர சொன்னார். குளித்து விட்டு வெளியே வந்தேன் , வனிதா அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அவளை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம் ஓடி சென்று கட்டி கொண்டேன். சிவாவின் அம்மா எங்களிடம் ஒரு கவரை கொடுத்து அதில் உள்ள புடவையை கட்டி கொண்டு வர சொன்னார். நான் வனிதாவை பார்த்தேன் அவள் உடனே ரொம்ப நடிக்காத அக்கா உனக்கு புடவை கட்ட தெரியும் னு எனக்கு தெரியும் , உன்னை புடவையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றாள். நாங்கள் இருவரும் அறைக்கு சென்று புடவை கட்டி கொண்டு வந்தோம். நங்கள் அணிந்து கொண்டு இருப்பது ஒரே நிற புடவை , அப்போது தான் முதன் முதலாக வனிதாவை புடவையில் பார்க்கிறேன். என் தங்கை எவ்வவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டால், அவள் தேவதை போல் இருந்தாள். நான் அவளின் நெற்றியில் முத்தம் இட்டு அழகா இருக்குடி என்றேன். பிறகு சிவாவின் அம்மா எனக்கு நகைகள் கொடுத்தார் அதை போட்டு கொண்டேன் . ஆனால் என் தங்கை கழுத்தில் மட்டும் ஒரே செயின் இருந்து அதனால் என் பையிலிருந்து நகையை எடுத்து அவளுக்கு போட்டு விட்டேன். வனிதா வேண்டாம் என்று சொல்ல, அவளிடம் இது என்னோட நகை நான் உனக்கு தருகிறேன் என்றேன். பிறகு நங்கள் இருவரும் மாற்றி மாற்றி நெற்றியில்முத்தம் கொடுத்து கொண்டோம். பிறகு நாங்கள் இருவரும் மணப்பெண் சுதா இருக்கும் அறைக்கு சென்றோம், சுதா என்னை பார்த்து வாங்க அண்ணி நீங்கள் தான் என் மணப்பெண் தோழி என்று சொல்லி கூடவே இருக்க சொன்னாள். என்னை அவர்கள் நான்றாக பார்த்து கொண்டார்கள் அவர்களுடவ அண்ணியகவும், அவரின் அம்மா மருமாகளாகவும் ஏற்று கொண்டார்கள், சுதா என்னிடம் அண்ணி உங்களை பற்றி எல்லாம் விஷயத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டார் , அப்பாவுக்கு தான் முதலில் பிடிக்கவில்லை . ஆனால் அம்மாவுக்கு ஓகே தான், அதனால் பயப்பட வேண்டாம் என்று சொன்னாள். எனக்கும் அவள் சொன்னதை கேட்ட பிறகு அப்படியென்றால் என்னால் தான் இவ்வளவு பிரச்சனை அதனால் தான் எனக்கு போன் செய்யவில்லை என்று புரிந்தது. நான் தான் அவசரப்பட்டு அவரை பற்றி தவறாக எண்ணிட்டேன் என்று என்னை நானே திட்டி கொண்டேன். எனக்கு அவரிடம் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.கல்யாணமும் நல்லபடியாக நடந்தது. என் காதலரிடம் தனியே பேச சந்தரப்பமே அமையவில்லை. நாங்களும் அவர்கடம் சொல்லிவிட்டு எங்கள் வீட்டிற்க்கு கிளம்பினோம். நாங்கள் மறுநாள் காலை வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம். ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தேன், அவர்களுடன் பேசி மகிழ்ந்தேன். நான் அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசி ரொம்ப நாட்கள் ஆனது அதனால் அவர்கள் கூடவே இருந்தேன். நான் அம்மாவிடம் வங்கி செல்ல வேண்டும் என்று சொன்னேன், அவரும் சரி னென்று சொன்னார். நாங்கள் வங்கிக்கு சென்று என்னுடைய கணக்கில் இருக்கும் 2 லட்சத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்து தங்கைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க சொன்னேன். அம்மாவும் சரி வா கயல் போகும் போது அவர்களுக்கு நகை எடுத்து கொண்டு போகலாம் என்று சொன்னார், நான் ஓகே என்றேன். நகை கடைக்கு சென்று கம்மல், இரண்டு வளையல் மற்றும் ஒரு நெக்லஸ் எடுத்தோம் . பிறகு வீட்தற்க்கு வந்தோம்.
Comments
Post a Comment