நானும் வேலைக்கு செல்லவில்லை , கீர்த்தி வெளியே சென்று விட்டாள், வனிதா டியூஷன் சென்று விட்டாள். நானும் அம்மாவும் வீட்டில் இருந்தோம். அப்போது கீர்த்தியின் தோழிகள் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உட்கார வைத்து விட்டு டீ போட்டு கொடுத்தேன். பிறகு அம்மா அவர்களிடம் பேசி கொண்டு இருக்க நான் சமைக்க சென்றேன். கிர்த்தியும் வீட்டிற்கு வந்தால் எல்லோரையும் அம்மாவிற்ற்கு அறிமுக செய்தால், என்னை பற்றி சொல்லவில்லை. அவர்களே வீட்டில் உள்ளவர்களை பற்றி கேட்க, அவள் என்னை பார்த்து இவள் பக்கத்து வீட்டு பெண் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை அதனால் பகலில் இங்கு தான் இருப்பாள் என்று சொன்னாள். அதை கேட்டதும் எனக்கு அழுகை வந்து விட்டது அப்படியே பொறுமையாக அறைக்கு சென்று அழுதேன். கீர்த்தி என்னை அவ்வளவு கேவலமாக நினைத்து கொண்டிருக்கிறாள் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. அம்மா என்னை வந்து சமாதானம் செய்ய பிறகு அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினோம். அவர்கள் சென்றதும் அம்மா கீர்த்தியிடம் ஏன் கயலை உன் அண்ணன் என்று அறிமுகம் செய்தால் என்ன என்று கேட்டாள். அதற்கு கீர்த்தி அம்மாவிடம் ஊரில் உள்ளவர்கள் கிண்டல் பண்ணது போதாதா கல்லூரியிலும் அசிங்க படனுமா அதனால் பொய் சொன்னேன் என்று சொன்னாள். நான் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கெஞ்சினேன் , அதை கீர்த்தி தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு இடையில் சண்டை மூட்டி விட்டு இப்போது சமாதானம் செய்வது போல் நடிக்கிராய என்று கேட்டாள் , உடனே அம்மா அவளை அடித்தால் , அவள் அழுது கொண்டே இன்று அவன் இந்த வீட்டில் இருக்க வேண்டும் இல்லை நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றால். நான் அம்மாவிடம் இந்த வீட்டில் இருந்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் அதனால் நான் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறேன் . அம்மா வேண்டாம் என்றார். நான் அவரிடம் இல்லம்மா பணம் கொடுத்தார் அல்லவா அவருக்கு பணம் திருபி தரணும் , அது மட்டுமில்லாமல் அன்று உங்களிடம் ஒரு விஷயம் கேட்டார் அல்லவா அது வேறு ஒன்றுமில்லை , அவர் எனக்கு ஒரு வேலை பார்த்து இருக்கிறார் அதற்குத்தான் வர சொல்லி போன் செய்கிறார் அதனால் நான் செல்கிறேன் என்றேன். அன்று இரவு வனிதாவிடம் சொன்னேன் அவள் விடுவதாக இல்லை , அவளை சமாதானம் செய்து விட்டு சென்னைக்கு புறப்பட்டேன்.
அம்மா சிவாவிடம் பேசி வாடகையின் ஒரு சிறு பகுதி நான் தருவதாக கூறி அவரிடம் பேசி என்னை அவரது கண்காணிப்பில் இருக்கும்படி செய்து விட்டார்.அவரிடம் என்னை நன்றாக பார்த்து கொள்ளுமாறு சொன்னாள். நான் சென்னைக்கு சென்றேன் என்னை வரவேற்க சிவா ரயில் நிலையம் வந்திருந்தார் , என்னை பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம்.
என்னை அவர் வீட்டிற்ற்கு அழைத்து சென்று என்னுடைய அறையை காட்டினார். பிறகு அவர் என்னிடம் எங்கும் வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே இரு மாதம் 15000 கொடுக்கிறேன் வீட்டிற்கு அனுப்பு , எனக்கு சமைத்து போடு என்று சொன்னார் நானும் சரி என்று சொன்னேன். முதல் நாளே பயங்கர வெறுப்பாக இருந்தது . ஒரு வாரம் கடக்க ரொம்ப கஷ்ட பாட்டன். நான் இதை பற்றி சொன்னேன் அவரும் யோசிக்கிறேன் என்று சொல்லி மறுநாள் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்தால் எனக்கு பேச்சு துணையாக இருக்க வேண்டுமெண்று.
Comments
Post a Comment