என் பெயர் ராம்கி ,நான் ராணுவத்தில் வேலை செய்கிறேன். என் அப்பா பெயர் கணேஷ் , என் அம்மா பெயர் சாந்தி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் பெயர் பிரியா கல்லூரியில் படிக்கிறாள்.
நீண்ட காலம் கழித்து நான் வீட்டிற்க்கு வந்தேன். நான் அம்மாவிடம் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னேன். அவள் பெயர் கீர்த்தி ,என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவள் அவளும் ராணுவத்தில் வேலை செய்கிறாள் என்றேன். அம்மா என்னிடம் இப்போது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றாள். நான் அம்மாவிடம் நீங்கள் அவளுடைய பெற்றோர் கிட்ட பேசி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றேன். அம்மா என்னிடம் அதற்கு முன் நான் நீ காதலிக்கும் பெண்ணை பார்க்க வேண்டும் என்றார் நானும் சரி என்று அவளை எங்கள் வீட்டிற்கு வர சொன்னேன். கீர்த்தியும் எங்கள் வீட்டிற்க்கு வந்தால் என் அப்பா, அம்மா மற்றும் என் தங்கைக்கும் பிடித்து விட்டது. அம்மா அவளிடம் சில கேள்விகளை கேட்டு பிறகு எங்களிடம் என்ன நடந்தாலும் எவ்வளவு சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பிரிய மாட்டிர்கள் என்று சத்தியம் செய்தால் நான் கீர்த்தி வீட்டில் பேசுகிறேன் என்றார். நாங்கள் இருவரும் அம்மாவுக்கு சத்தியம் செய்தோம். மறுநாள் நாங்கள் எல்லோரும் கீர்த்தி வீட்டுக்கு சென்றோம். கீர்த்தியின் பெற்றோர் எங்களை அழைத்து அமர செய்தார். நாங்கள் எல்லோரும் அமர்ந்தோம் பிறகு அவள் அப்பா எங்களை பார்த்து,
கீ. அப்பா : யார் நீங்கள் , நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டிற்க்கு வந்த காரணம் என்ன என்று கேட்டார்
அம்மா : உங்க பெண்ணை கோவிலில் பார்த்தோம் அழகாக இருந்தாள், நல்ல குணம் ஆதலால் உடனடியாக கேட்டு விடலாம் என்று வீட்டிற்கு வந்தோம்.
கீ. அம்மா(கௌரி) : அவள் நல்ல குணம் கொண்டவள் ஆனால் அவளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கு அதுவும் இல்லாமல் அவளை என்னுடைய அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க போகிறோம் என்றார்
கீ.அப்பா(ரவி) : கொஞ்சம் இருடி என்று சொல்லி.. என் பெண்ணுக்கு யாரை பிடிக்கிறதோ அவனை தான் திருமணம் செய்வேன். பிறகு அவர் நீங்கள் எந்த ஆளுங்க என்று கேட்க நாங்கள் புரியாமல் திகைக்க
கீ. அப்பா : மறுபடியும் அதாங்க ..நீங்க என்ன ஜாதி ? என்று கேட்க
அம்மா : நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று சொல்ல
கீ.அப்பா : நாங்கள் என் பெண்ணை என் ஆளுங்களுக்கு தான் கொடுப்பேன் என்று சொல்ல
அப்பா : நாங்கள் ****** இந்த ஜாதி என்று சொல்ல
கீ. அப்பா : கண்டிப்பாக நான் ஒப்பு கொள்ள மாட்டேன் என்று சொன்னார்
அம்மா : வேறு வழியின்றி அவரிடம் நாங்கள் இருவரும் காதலிப்பதை சொல்லிவிட்டார்
கீ. அப்பா : கீர்த்தியிடம் அவர்கள் சொல்வது உண்மையா என கேட்டார்
கீர்த்தி : ஆமாம் என்று தலைசைக்க
கௌரி அத்தை கீர்த்தியை அறைந்தாள். பிறகு ரவி எங்களிடம் எங்கள் பெண்ணை உங்கள் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் வேண்டுமென்றால் உங்கள் மகனை வீட்டுட்டோட மாப்பிள்ளையாக என் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று சொல்ல , அப்பா அதெல்லாம் முடியாது என்று சொல்ல அப்படியென்றால் இந்த திருமணம் நடக்காது என கீர்த்தி அப்பா சொன்னார்.
Comments
Post a Comment