அம்மா அவரிடம் கொஞ்சம் காலம் அவகாசம் கொடுங்கள் யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தார். நாங்கள் வீடு வந்ததும் அப்பா அம்மாவிடம் இந்த பெண் வேண்டாம் என்று சொல்ல , அம்மா அவரிடம் முடிவு செய்ய வேண்டியது நீங்களோ நானோ இல்லை ராம்கி தான் என்று சொல்லி என்னிடம் கேட்க நான் எதுவும் சொல்ல முடியாமல் நின்றேன்.
அன்று மாலை கீர்த்தி எனக்கு போன் செய்து விட்டு எங்கள் வீட்டில் நம்முடைய திருமணத்திற்கு சம்மதம் சொல்ல போவதில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று சொல்ல நான் பயந்து வேண்டாம் என்று சொல்லி அழ அம்மா வேகமாக வந்து என்னாச்சு எதற்க்காக அழுகிறாய் என்று கேட்டாள் நான் சொன்னேன். என்னுடைய போனை வாங்கி கீர்த்தியிடம் உங்கள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என்னை நம்பு என்று சொன்னார் அதன்பிறகுதான் கீர்த்தி அமைதியனாள். அம்மா என்னிடம் கோவமாக ஒரு காதலுக்காக தற்கொலை செய்ய முடிவு செய்து விட்டால் ஆனால் நீ கோழை மாதிரி அழுது கொண்டிருக்கிறாய் என்று சொல்லி நீ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டு அவள் வீட்டில் இரு என்று சொன்னாள். நான் அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டு முடிவு செய்யலாம் என்று சொன்னேன் அம்மா அதெல்லாம் வேண்டாம் என சொன்னாள்.
மறுநாள் நாங்கள் இருவரும் கீர்த்தி வீட்டிற்க்கு சென்றோம் , அவர் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் என சொன்னேன் அவள் அம்மா எங்களிடம் எனக்கு சில நிபந்தனைகள் இருக்கு,
1. கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல கூடாது
2. கல்யாணத்திற்கு பிறகு நான் சொல்வதை தான் செய்ய வேண்டும்
3. இந்த வீட்டில் உள்ளவர்களை எப்போதும் எதிர்த்து பேச கூடாது
4. வெளியே எங்கு சென்றாலும் எங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும் இப்போது இவர் எனக்கு ஒரு மருமகள் மாதிரிதான் என்று சொன்னார், பிறகு சத்தியம் செய்ய சொன்னாள்.
இதைஎல்லாம் கேட்கும் போது எனக்கோ பயமாக இருந்தது, கீர்த்தி இந்த நிபந்தனைகளை ஒப்பு கொள்ள வேண்டாம் என்று சொல்ல அம்மா உங்கள் காதல் மீது நம்புக்கை உள்ளது அல்லவா என்று சொல்லி சத்தியம் செய்ய சொன்னாள். நானும் சத்தியம் செய்தேன். வீட்டிற்கு சென்று அப்பாவை சமாதானம் செய்தோம் , இருந்தாலும் அப்பாவிற்கு இதில் துளியும் விருப்பம் இல்லை.
மறுநாள் அத்தை எங்களை கோவிலுக்கு வர சொன்னார் நாங்கள் இருவரும் புறப்பட்டு சென்றோம். அம்மா என்னிடம் கீர்த்தியின் அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை அதனால அவர்கள் எது கேட்டாலும் நான் பேசி கொள்கிறேன் என்றார். நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்றோம் அத்தை எங்களிடம் உங்கள் மகனுக்கு என்ன செய்ய போகிறீர்கள் உங்கள் மகன் தான் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வாழ வருகிறார் எவ்வளவு வரதட்சணை கொடுக்க முடியம் என்று கேட்டார். அம்மா எங்களால் முடிந்ததை செய்கிறேன் என்றார். அத்தை அம்மாவிடம் நீங்கள் ஒரு டீச்சர் சொன்னதை செய்ய7ங்கள் என்று சொன்னார். பிறகு அத்தை என்னிடம் எங்கள் உறவினர்கள் சந்திக்க வேண்டும் , அவர்களை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள் என்றார் , அம்மாவும் போய்ட்டு வர சொன்னார்.
நானும் அவர்களுடன் சென்றேன்.
Comments
Post a Comment