மறுநாள் காலை கௌரி அத்தையின் அண்ணன் வீட்டில் இருந்து எங்களை சாப்பிட அழைத்தனர். பிறகு நாங்கள் இருவரும் கிளம்பி சென்றோம் அதே தெருவில் இருப்பதால் நடந்து சென்றோம் , போகும் போது கீர்த்தி என் கழுத்தை பிடித்து பின்னால் ஏறி தூக்கி செல்ல சொன்னால், நாங்கள் இருவரூம் சிரித்து கொண்டே அவள் அத்தை வீட்டிக்கு சென்றோம். உள்ளே சென்றதும் எங்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு முகம் கழுவி கொண்டு வர சொன்னார். பின்னர் சாராத(அம்மா மாதிரி) என்னிடம் அம்மா என்றே அழைக்க சொன்னார். பிறகு என்னை அழைத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றார் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சரதாம்மா அனைவரையும் உட்கார வைத்து விட்டு என்னிடம் அவர்கள் சாப்பிட்ட பிறகு நாம் சாப்பிடலாம் என்றாள். சரதாம்மா கணவர், கீர்த்தி மற்றும் அவருடைய பையன் வேணு மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சாரதம்மா என்னை பரிமாற சொன்னால் பிறகு அவர் என்னிடம் இனிமேல் நீ இதை பழகி கொள்ள வேண்டும் என்றார். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவர் கீர்த்தியிடம் வேணுவை தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று இருந்தேன் அதற்குள் நீ காதலித்து கல்யாணம் பண்ணி கொண்டாய் என்று சொன்னார். வேணு என்னை பாரர்த்து சிசிரித்து கொண்டே இருந்தார். அன்று இரவு என்னை சரதாம்மா அறையில் படுக்க சொன்னாள். கீர்த்தியால் எதுவும் சொல்ல முடியவில்லை. மறுநாள் நாங்கள் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தோம் அப்போது சரதாம்மா என்னை அழைத்து என் கழுத்தில் சிறு செயின் போட்டு விட்டார் அது பெண்கள் போடும் செயின் மாதிரி இருந்தது. என்னிடம் இன்னொரு பை கொடுத்தார் இது எதிர்காலத்தில் உதவும் என்று சொன்னார் நான் திறந்து பார்த்தேன் அதில் புடவை இருந்தது, என்னால் அதை வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை , வாங்கவும் மனசில்லை இருந்தாலும் வாங்கி கொண்டு வந்தேன் . நாங்கள் கிளம்பும் போது சரதாம்மா எங்களை நிறுத்தி கீர்த்தியிடம் மெட்டியை கொடுத்து காலில் போட்டு விட சொன்னால் , கீர்த்தி யோசிக்க சரதாம்மா ஆண்கள் மெட்டி போடுவது தவறல்ல இதனால் மற்ற பெண்கள் இவரை பார்க்கும் போது புரிந்து கொள்வார்கள் என சொல்ல கீர்த்தி என் காலில் மெட்டி போட்டு விட்டாள் பிறகு இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றோம். அன்று இரவு கீர்த்தி என்னிடம் கொஞ்ச நாட்கள் தான் பொறுத்து கொள் நம்மை அழைத்ததும் ராணுவத்திற்கு சென்று விடலாம் என்று சொன்னால் நானும் தலையாட்டினேன்.
இப்படியே ஒரு மாதம் சென்றது திடிரென்று ஒருநாள் கீர்த்திக்கு போன் வந்தது அவளை ராணுவத்திற்கு திரும்ப வர சொன்னார்கள். கீர்த்தி என்னிடம் உனக்கு போன் கால் வரவில்லையா என கேட்க நான் இல்லை என்றேன். ஆனால் அப்போது அங்கு வந்த அத்தை அவளிடம் உண்மையை சொல்லி விட்டால் நான் வேலை விட்டது கீர்த்திக்கு இன்னும் தெரியாது . கீர்த்தி என்னை முறைத்து கொண்டு பிறகு அழுது கொண்டே அறைக்கு ஓடினாள். நான் அவளை சமாதான செய்ய முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை, அவள் கிளம்பி செல்லும் போது கூட என்னிடம் பேச வில்லை எனக்கு ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. அவளை நினைத்து வருத்தத்தில் இருந்தேன். கீர்த்தி அங்கு சென்று ஒரு வாரம் ஆகியும் எனக்கு போன் செய்யவில்லை..
Comments
Post a Comment