Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி-11

  • இதை பற்றி என் தங்கையிடம் சொல்ல விரும்பவில்லை , யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன் .. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்று என்னுடைய மன வருத்தத்தை சொல்லி அழுதேன்.. அவர் அப்போது என்னை கட்டி அனைத்து கொண்டு கீர்த்தி இப்போ பெரிய கம்பனி முதலாளி , உன் தங்கை விரைவில் போலீஸ் வேலையில் சேர்ந்து விடுவாள் ..நீ உன்னை பற்றி யோசிக்காமல் வாழ்ந்து விட்டாய் இனிமேல் ஆவது உன்னை பற்றி யோசி என்று சொல்லி உனக்கு படிக்க விருப்பம் இருக்கா என கேட்டார் ..ஆம் என்றேன். ஹேமா டீச்சர் எனக்கு தெரிந்தவர்களிடம் உன்னை பற்றி சொல்லி படிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். தங்கையும் படிப்பு முடித்து விட்டு போலீசுக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தாள். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒருநாள் ஹேமா டீச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தார், வரும்போது போது மகிழிச்சியுடன் இருந்தார் என்ன என்று கேட்டேன். அவர அருகில் வந்து என்னையும் தங்கையையும் உட்கார வைத்து உனக்கு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டேன். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து நர்சிங் கல்லூரியில் வாங்கிருக்கிறேன் என்றார். என் தங்கைக்கு அளவில்லா மகிழ்ச்சி ஆனால் எனக்கு பணம் பற்றி கவலை , அவர் பணத்தை பற்றி கவலை படாதே அங்கு என்னுடைய தோழித்தான் முதல்வர் அதனால் கவலைப்பிப்பட வேண்டாம் நான் பேசி கொள்கிறேன் என்றார்.பிறகு டீச்சர் கிளம்பிவிட்டார் , எனக்கு மகிழ்ச்சி யாக இருந்தாலும் என்னால் முடிந்த வரை பணம் சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.கடைசியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் நர்சிங் பண்ணலாம் என எண்ணினேன்.

  • மூன்று நாட்கள் கழித்து ஹேமா டீச்சர் வீட்டிற்கு வந்தார், அவர் என்னிடம் இந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. நீ மட்டும் தான் ஒரே ஆண் மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform கொடுப்பார்கள் பெண்களுக்கு வெள்ளை புடவைதான் uniform, உனக்கு வெள்ளை pant/ shirt. அவர் என்னிடம் ஒருநாள் நாம் இருவரும் அவரை சந்திக்க செல்ல வேண்டும் என்றார் நானும் சரி என்று சொல்லி, நீங்கள் சொல்லும் போது போகலாம் என்றேன். டீச்சர் வரும் ஞாயிற்று கிழமை போய் சந்தித்து விட்டு வரலாம் என்றார்.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...