அம்மா அறைக்குள் வந்தபோது நான் என் அறையில் அமர்ந்திருந்தேன். நான் என் அம்மாவைப் பார்த்து "ஏன் அம்மா..என்னை பரதநாட்டியமும் கற்று கொள்ள சொல்கிறீர்கள் , அது பெண் நடனமும் தானே ,நான் ஏன் கற்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அம்மா என்னிடம் அது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கற்கலாம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் . சிலருக்கு அதுதான் வருங்காலம் , மற்றவங்களை விட்டுவிடு உங்கள் அப்பா பரதநாட்டியம் கற்க விரும்பினார் ஆனால் உன் தாத்தா சம்மதிக்கவில்லை அதனால் தான் ராணுவத்தில் சேர்ந்தார், ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் கற்றார் ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவரால் தொடர முடியவில்லை .
தீபக் உனக்கு ஏற்கனவே நடனமாடத் தெரியும், நீயும் கற்றுக்கொண்டாய் அதனால்தான் நான் பரதநாட்டியத்தைத் தேர்ந்தெடுத்தேன், மறுபடியும் அம்மா என்னிடம் சொல்லுடா , 'நீ அதையே திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?' என்று சொல்லிவிட்டு, அம்மா
என்னிடம் முடிவு செய்துகொள் என்று சொல்லிவிட்டு வெளியேறினாள். நான் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் 'எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் தான் கற்று கொள்ள நினைத்தேன், அம்மாவின் ஆசையையும் பூர்த்தி செய்வேன்
அடுத்த நாள் காலை நான் அம்மாவிடம் சரி சொன்னேன், பரதநாட்டியம் தெரியாததால் என்னால் போக முடியாது என்று சொன்னேன். அம்மா அதை பற்றி கவலைப்பட வேண்டாம் நான் ஏற்கனவே ஏற்பாடு செய்கிறேன் என்றார். அம்மா போனில் யாரிடமோ பேசினாள், ஒரு நாளில், என் அம்மா அருகிலுள்ள பள்ளி இடத்தில் ஒரு பாரம்பரிய நடன ஆசிரியரை ஏற்பாடு செய்தார். ஆசிரியர் என் அம்மாவின் கூட வேலை செய்யும் ஒருத்தரின் தோழி . அம்மா என்னிடம் சொன்னார் , "உன் அப்பா மிகவும் திறமையானவர், நீயும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் " என்றார் . பிறகு என்னை பார்த்து அமைதியாகவும் கூச்சமாகவும் இருக்க வேண்டாம், தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இரு என்றார் ,பிறகு என்னிடம் நான் என் பழைய மகனை பார்க்க விரும்புகிறேன் என்றார். அம்மா என்னை பரதநாட்டியம் அகாடமியில் சேர்க்க வேண்டும். என் தந்தையே அந்த பாரம்பரியத்தில் நடனமாடி, அதைத் தொடர ஊக்குவித்தார், நாங்கள் குரு அறைக்குள் சென்று, அம்மா பாரம்பரிய தட்டில் குரு தட்சணை கொடுத்தோம் , என் அம்மாவின் வேண்டுகோளைக் கேட்டு அவர்கள் சிரித்தார் . அவர் என்னை அன்புடன் அழைத்து என் பெயரைக் கேட்டார் , என் பெயர் தீபக் என்று அவரிடம் சொன்னேன்.
அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்றேன். அம்மா சொன்னது போல் மாலை 5 மணிக்கே நான் அங்கு வந்து சேர்ந்தேன். என்னைப் போலவே 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர் . குரு பெயர் திருமதி .ரியா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருக்கு சுமார் 42 வயது இருக்கும். அவர் சிவப்பு நிற புடவை மற்றும் அதற்கு ஏற்ற ரவிக்கை அணிந்திருந்தாள். அவள் கைகளில் வளையல்கள் மற்றும் கால் மோதிரம் போன்ற ஆபரணங்களை அணிந்திருந்தாள். அவளது காதுகள் ஒவ்வொன்றிலும் 2 காதணிகளால் அலங்கரிக்கப்பட்டு, மூக்கில் நன்கு பளபளக்கும் மூக்குத்தி இருந்தது.
குரு எங்களை பார்த்து "இன்று முதல் நாள் என்பதால் நான் பரதநாட்டியம் பற்றி விளக்குகிறேன், பிறகு குரு நமஸ்காரம் சொல்லி தருகிறேன் ," என்று கூறினார். "பரதநாட்டியம்" (தமிழகத்தில் ஒரு பாரம்பரிய நடனம்) கற்றுக் கொள்ள உள்ளோம், இது பெண்கள் மற்றும் சிறுவர்களால் ஆடப்படுகிறது. அவர் என்னை மற்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள், பிறகு அவருடைய குரு நடனக் கலைஞர்களின் சில படங்களைக் காட்டினாள், சில கை முத்திரைகளைக் காட்டினாள், அவர் வகுப்பை முடித்தார் , அடுத்த நாள் மாலை 5 மணிக்கு வரச் சொன்னாள்.
Comments
Post a Comment