அப்பா ராணுவத்திற்கு சென்று விடுவார், வீட்டில் அம்மா , நான் மற்றும் என் தம்பி மூவர் தான் இருப்போம். நானும் என் தம்பியும் சேட்டைகள் செய்யும் வாலு பசங்க, அதனால் அடிக்கடி நாங்கள் பக்கத்து வீட்டு பசங்க கூட சண்டை போடுவோம். நாங்கள் என்ன செய்தாலும் அம்மா எங்களை அடிக்க மாட்டார் ஆனால் திட்டுவார். எங்களுக்குள் சண்டை வந்தால் நான் என் தம்பியை அடித்து விடுவேன். அவன் அழுது கொண்டே அம்மாவிடம் சொல்லுவான். எங்களை ராணுவ பள்ளியில் சேர்த்து விட்டனர். நாங்களும் சந்தோஷமாக பள்ளிக்கு சென்று வந்தோம். நான் பள்ளியில் படிக்கும் போது நல்ல சுறு சுறுப்பாக இருப்பேன். அப்பா எங்களை காரதே வகுப்புக்கும் அனுப்பினார். எனக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை, ஆனால் என் தம்பி நன்றாக படிப்பான். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. நான் பத்தாம் வகுப்பு முடித்து விட்டேன். கோடை கால விடுமுறையில் எங்கள் அப்பாவும் வீட்டிற்கு வந்தார். அந்த வருடம் அப்பா எங்களுக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்தார். ஒருநாள் நாங்கள் தனியாக பைக் எடுத்து கொண்டு ஓட்ட பழகினோம். அப்படித்தான் தனியாக ஓட்டும் பழகும் போது பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன். என் தலையில் அடிப்பட்டது. மருத்துவ மனையில் சேர்த்தனர், எனக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை பிறகு வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டனர். ஆனால் எனக்குள் ஒரு சிறிய மாற்றம் முன்பு போல அதிகமாகவும், சத்தமாகவும் பேச முடியவில்லை அப்படி பேசினால் தலை வலிக்கிறது. அதனால் என்னுடைய பழக்கங்கள் மாறின . அதன் பிறகு நான் அமைதியாக இருந்தேன், ஆனால் இதை பார்த்த என் கொஞ்சம் பயம் வந்து விட்டது, என்னை முன்பு போல் மாற்ற என்னிடம் எவ்வளவோ பேசியும் என்னால் அப்படி மாற முடியவில்லை. எனக்கு இப்படி இருப்பது பிடிக்கவில்லை அதனால் அம்மா என்னை மறுபடியும் கராத்தே வகுப்புக்கு அனுப்பினார்கள். கொஞ்ச நாட்கள் நன்றாக சென்றன.ஒருநாள் வகுப்பில் சண்டை பயிற்சி செய்யும் போது ஒரு பையன் தெரியாமல் தலையில் அடித்து விட்டான் , எனக்கு வலிப்பு வந்து அப்படியே கீழே விழுந்து விட்டேன் .திரும்பவும் என்னை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர் எங்களிடம் ஒன்றுமில்லை இவனுக்கு அடிப்பட்டத்தில் நரம்பு கொஞ்சம் பாதித்து இருக்கு , இப்போது மாத்திரைகள் கொடுக்கிறேன் சரியாகும் வரை இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் , இவன் அமைதியாக தான் இருப்பான் அப்படிஇருந்தால் இன்னும் ஆபத்து அதனால் இவனை அமைதியாக இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று டாக்டர் அம்மாவிடம் சொன்னார்.
இரண்டு வாரங்கள் ஓடியது , எனக்கு தனிமையில் இருக்க தான் பிடித்தது, எப்போதும் தனிமையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். நான் தப்பியிடமும், அம்மாவிடமும் , அப்பாவிடமும் பேசுவதை குறைத்து விட்டேன். நான் எப்போதும் எதையோ யோசித்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பேன் இதை பார்த்த அம்மா என்னிடம் வந்து இப்போது என்னாச்சு னு நீ தனிமையில் இருக்கிறாய் ஏன் எங்களிடம் பேச விருப்பம் இல்லையா என்று கேட்டார். நான் அவரை பார்த்து அப்படி இல்லம்மா , எனக்கு தனிமையில் இருக்க தான் பிடித்திருக்கிறது என்றேன். அம்மா என்னை பார்த்து டாக்டர் என்ன சொன்னார் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டார். நான் நியாபகம் இருக்கு என்றேன். அம்மா என்னிடம் நாளை உன்னை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல போகிறேன் என்றார், நாணும் வருகிறேன் என்றேன். மறுநாள் காலை அம்மா அழைத்து கொண்டு சென்றார். போனபிறகு தான் தெரிந்தது அது பாட்டு சொல்லி இடம் , நான் அம்மாவை பார்த்து வேண்டாம் என்றேன், பிறகு அம்மா என்னை பார்த்து பாட்டு கற்று கொள்ள விருப்பம் இல்லை என்றால் நாட்டியம் கற்று கொள் என்றார். நான் அம்மாவை கோபமாக பார்த்து வீட்டிற்க்கு போகலாம் என்றேன், பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்தோம்.
Comments
Post a Comment