மணி என்னிடம் இருவரும் தனியாக செல்வோம் என்று கூறி அவன் வேறு ஒரு வழியில் சென்றான். நானும் என்னுடைய வகுப்பறைக்கு செல்லும் போது சில சீனியர் மாணவர்கள் என்னை பார்த்துவிட்டு அழைத்தனர். நான் அருகில் சென்றதும் ஒரு மாணவன் என்னிடம் " என்ன மனசுல தோனி னு நினைப்பு அவரை மாதிரி முடி விட்டிருக்க என்று சொல்லி முடியை பிடித்து பிறகு நடனம் ஆட சொன்னார்கள் , நானும் ஆடி கொண்டே இருக்கும் போது ஒருவன் "மச்சி இவன் நல்லா தான் நடனம் ஆடுறான், என்று சொல்ல , சரி எந்த பிரிவு உனக்கு என்ன விளையாட்டு விளையாட தெரியும் என்று கேட்க, நான் ஷுட்டில் விளையாடுவேன் என்றேன்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவன் என்னை நோக்கி வந்தான், அப்போது இன்னொரு மாணவன் இவன் பெயர் ராஜேஷ் , கல்லூரி ஷுட்டில் அணியின் கேப்டன் என்றான். ராஜேஷ் என்னருகில் வர அப்போது என்னை யாரோ பின்னாடி இழுத்தது போல் இருந்தது திரும்பி பார்த்தால் நிவாசினி நின்று கொண்டிருந்தாள். அவள் ராஜேஷிடம் இனிமேல் இவனை ராகிங் பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டு என்னை அழைத்து கொண்டு கேன்டீன் சென்றாள்.
நிவாசினி என்னை பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள், நான் அவளிடம் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்றேன். அவள் உடனே கொஞ்சம் பொறு உன்னிடம் பேச வேண்டும் என்றால்.பிறகு அவள் என்னிடம் " நான் உன்னை மாலில் பார்த்ததில் இருந்து எனக்கு உன் நினைவாகவே இருக்கு , அப்படி உன்கிட்ட என்ன இருக்கு என்று தெரியவில்லை , நான் உன்னை நேசிக்கவே ஆரம்பித்து விட்டேன் என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தேன். தொடர்ந்து அவள் என்னிடம் "நீ என்னை விட 2 வயது சிரியவனாகவும் இருக்கிறாய் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றாள். அவள் என் கையை பிடித்து கொண்டு எழுந்து வா பைக்கில் ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம் என்று சொல்லி இழுத்து கொண்டே ஓடினாள். அவள் என்னிடம் பைக்கை கொடுத்து ஓட்ட சொன்னாள், எனக்கு புல்லட் பைக்கை ஓட்ட தெரியாது , ஸ்கூட்டி மட்டும் தான் ஓட்ட தெரியும் என்றேன். அவள் பைக் start பண்ணிட்டு பின்னாடி உட்கார சொல்லி கல்லூரிக்கு வெளியே சென்றேன். அப்போ சென்றதுதான் மாலை என்னை கொண்டு வந்து விடுதியில் விட்டு சென்றாள்.
நான் விடுதிக்கு சென்றதும் மணி என்னை பார்த்து " என்னடா நிவாசினி உனக்கு இறக்கி விட்டு செல்கிறார், உங்க அக்காவ என்று கேட்டான்,
நான் : இல்லை என்றேன்
மணி : பரவால்ல டா கல்லூரியின் பெரிய புள்ளியை மடக்கிட்ட என்றான்.
நான் : என்னடா சொல்ற என்று கேட்டேன்
மணி : உனக்கு தெரியாதா அவங்க தான் நிவாசினி , கல்லூரியின் மகளிர் குத்து சண்டை சாம்பியன்.
நான் : அதிர்ச்சில் நின்றேன்
மணி : ராஜேஷ் என்ற ஒரு பையன் நிவாசினியை 3 வருடமாக ஒரு தலையாக காதலித்து கொண்டிருக்கிறான் என்றான்.
எனக்கு அப்போது தான் புரிந்தது , காலையில் ராஜேஷ் எதற்கு என்னை செல்ல அனுமதித்தான் என்று. மறுநாள் ராஜேஷ் என்னிடம் உன்னை அணியில் சேர்த்து கொள்கிறோம் அதற்கு பதிலாக அவன் என்னிடம் அவனுடைய காதலுக்கு தூது போக கேட்டான், நானும் வேறு வழில்லாமல் ஒற்று கொண்டேன். அப்படியே இரண்டு மாதங்கள் ஓடின, நிவாசினி அடிக்கடி என்னுடைய வகுப்பு வந்து என் அருகில் உட்காந்து கொள்வாள். மறுபக்கம் ராஜேஷ் இவன் வேறு விதமாக தொல்லை கொடுக்க எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் அப்படித்தான் நான் நிவாசினியிடன் வெளியே சென்ற போது , ராஜேஷ் பற்றி அவளிடம் கேட்டேன் அவளும் அவனை பிடிக்கும் என்றும் , அவனை பற்றி நன்றாக சொன்னாள், நான் அப்படியே இதை ராஜேஷ் கிட்ட சொன்னேன் அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியில் இருந்தான்.
Comments
Post a Comment