நீத்தி 3
அன்றிரவு அந்தப் பெண்கள் தங்கும் விடுதியின் இரு படுக்கைகள் கொண்ட அறையில் தனது கட்டிலில் அமர்ந்திருந்த பவானி கைபேசியினில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மெத்தை படுக்கையில் மேலே பார்த்தவாறு படுத்திருந்த நிவாசினி, நித்தியை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.
“யார் அவன்? எனக்கு ஏன் அவனை நினைச்சாலே மனசெல்லாம் பூரிச்சு போகுது? கனவுல கண்ட அந்த நிநி டாட்டூ எப்படி இவர் கையில இருக்கு?” என்று எந்த மாதிரி யோசித்தாலும் மனதின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வில்லை.
அதெப்படி நாம் நினைப்பதை போல அவனும் நினைக்கிறான் என்று யோசிக்க, அப்போது பவானியின் குரல்
மின்சாரம் போயி இரண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் வரவில்லை உள்ளே என்னடி பண்ற கேட்டு கொண்டு அறைக்குள் வந்தாள் பவானி, உள்ளே வந்த அவள் “ஹே ஹாசினி என் ஃபோன்ல சார்ஜ் இல்லடி! உன் ஃபோன கொடு என்று கேட்க அவளும் கொடுத்தால் பிறகு யோசிக்க ஆரம்பித்தாள்.
அவளிடம் அப்படி என்னடி யோசித்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்க , அதற்கு நிவாசினி
“நம்ம காலைல பார்த்தோமேடி! அவனை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன் என்றாள், பாவணிக்கு ஒரே ஆச்சர்யம், உடனே பவானி அவளிடம் "ஏன்டி அவன் ஒன்னும் பார்த்ததும் அட்ராக்ட் ஆகுற அளவுக்கு ஹேண்ட்சம்லாம் இல்லயே? பார்க்க வயசுல உன்னை விட சிறியவன் போல் தெரிகிறதே அதுவும் கழுத்தளவு முடி அவனுக்கு தாடியும், மீசையும் இல்ல , பார்க்க பையன் மாதிரியே இல்லை , எந்த விதத்திலையும் பொருத்தமாக இருக்க மாட்டான் , நீயும் அவனும் நடந்து சென்றால் அக்காவும் தம்பியும் இருக்கும் என சொல்லி” நிவாசினியை சீண்டும் விதமாய் அவள் கேட்டிருக்க,
“ம்ப்ச் பவா என்ன பேச்சு இது?” என அவளைக் கண்டிக்கும் விதமாய்க் கூறினாள் நிவாசினி. அவனின் தோற்றத்தை பவானி இவ்விதமாய கூறியது பிடிக்கவில்லை அவளுக்கு.
நிவாசினி பவானியிடம்,
“என் பெயரை சுருக்கி நிவாஸ் னு கூப்பிடுறது எனக்குப் பிடிக்காது. அது போல அவனுக்கும் நித்தி னு அவங்க பெயரை கூப்பிடுறது பிடிக்காதுனு சொன்னது என்னைய ரொம்பவே கவர்ந்தது. ஹே நம்மைப் போல் ஒருவன் மொமண்ட் அது! என்னோட கெஸ்ல அவங்க பேரு நித்திலன் ஆ தான் இருக்கனும் மென் குரலில் உணர்வாய் அவல் கூறினாள்.
அவளின் பேச்சில் பவானியோ, “என்னடி நடக்குது இங்க?” என்ற வகைப் பாவனையில் கண்களை உருட்டி கொண்டு நிவாசினியை பார்த்தாள்.
Comments
Post a Comment