நிவாசினி பொதுவாக சொன்ன விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டேன் அப்போதுதான் எனக்கு தெரியவில்லை அதனுடைய விளைவு கொஞ்ச நாட்கள் கழித்து தான் தெரிந்தது. திடிரென்று ஒருநாள் ராஜேஷ் அவளுக்கு காதலை சொல்ல போவதாக சொன்னான் , அதுவும் அனைத்து மாணவரின் முன்னணியில் எண்று எனக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் அவன் அனைவரையும் வர சொல்லி அவனுடைய காதலை சொல்ல , " அதற்கு அவள் எனக்கு உன் மீது காதல் இல்லை என்னை மன்னித்து விடு என்று சொல்லி, என்னிடம் வந்து நிவாசினி என்னை காதலிப்பதாக சொன்னாள் , நான் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றேன்." பிறகு அவள் என்னை கட்டி அணைத்து கொண்டாள். அப்போது ராஜேஷ் நிவாசினி அருகில் வந்து " என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை என்று கேட்டு , உனக்கு என்னை பிடிக்கும் என்று நித்திலன் சொன்னதால் தான், என் காதலை சொன்னேன் என்ற சொல்ல , நிவாசினி முகம் மாறியது , தொடர்ந்து ராஜேஷ் அவளிடம் அவனை உன்னிடம் என் காதலுக்கு தூதாக தான் அனுப்பினேன் ஆனால அவன் உன் வாயால் அவனை காதலிப்பதாக சொல்ல வைத்து விட்டான் என்று சொன்னான். நிவாசினி என்னை பார்த்து ராஜேஷ் சொல்வது உண்மையா என்று கேட்க , நான் ஆமாம் என்றேன். அவள் கோபத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு , இனிமேல் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி அழுது கொண்டே சென்று விட்டாள். நிவாசினி அழுவதை பார்த்து எனக்கே பரிதாபமாக இருந்ததது. அன்று மாலை அவளுடைய தோழி பவானி என்னிடம் வந்து " உன்னை பார்த்திலிருந்து அவள் உன்னை காதலிக்க தொடங்கினாள், உனக்காக அவள் எவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறாள், உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டியது தானே " என்று சொல்லிவிட்டு அவள் இனிமேல் உன்னை தொந்தரவு கொடுக்க மாட்டாள் நீ சந்தோஷமாக இரு என்று சொல்லி விட்டு சென்றாள்.
மறுநாள் நான் நிவாசினிக்காக காத்து கொண்டு இருந்தேன் , அவள் வரவில்லை அவளுடைய தோழி பவானியும் வரவில்லை. அன்று மாலை அவள் வீட்டுக்கு சென்று பார்த்தேன் அங்கேயும் இல்லை. அப்படியே ஓரு வாரம் தொடர்ந்து அவள் வீடுதி க்கு செல்வது அவள் இருக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பது என இருந்தேன், அப்படி ஒருநாள் பவானி என்னிடம் வந்து," நிவாசினி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் , நேரடியாக அவள் exam க்கு தான் வருவாள் ஆதலால் விடுதி பக்கம் வரவேண்டாம் என்று சொன்னாள்". நான் அவளிடம் பேச வேண்டும் என்றேன் அதற்கு பவானி இப்போது முடியாது அவள் வரும் போது சொல்கிறேன் அப்போது வந்து பார்த்து பேசிக்கொள் என்றாள், நானும் சரி என்று சொன்னேன்.
ஒருநாள் ப்ரின்சிபால் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்றார். அது கல்லூரிகளுக்குள் நடக்கும் போட்டி அணிகளுக்கான தேர்வு செய்து விட்டதாகவும் அவற்றை நோட்டீஸ் பலகையில் பார்த்து கொள்ள சொன்னார். நான் மிகவும் ஆவலுடன் சென்று பார்த்தேன் என்னுடைய பெயர் batmitton அணியில் இல்லை அப்போது அங்கு வந்த ராஜேஷ் நண்பர்கள் என்னை பார்த்து சிரித்து கொண்டே உன்னோட பெயர் இருக்காது என்றார்கள் அப்போது தான் புரிந்தது இது இவர்கள் வேலை என்று.
நான் பயிற்சியாளரிடம் கேட்டேன் , அதற்கு அவர் என்னிடம் " உன்னை நாங்கள் பயிற்சிக்கு மட்டும் தான் , உன்னால் அவர்களுக்கு இணையாக ஆட முடியாது என்று சொன்னார். நான் அவரிடம் அதெப்படி நீங்களே எல்லாம் முடிவுகளை எடுக்கிறறிர்கள் , கல்லூரின் ப்ரின்சிபாலிடம் புகார் செய்வதாக சொல்லிவிட்டு வந்தேன்
Comments
Post a Comment