இன்று நித்திலன் கல்லூரியில் சேர்க்கைக்கான படிவம் அவன் வாங்கி வந்திருந்தால் அதை எழுதி கொண்டு இருவரும் கல்லூரிக்கு புறப்பட்டனர் . இருவரும் கல்லூரியை அடைந்ததும் நேராக முதல்வர் அறைக்கு சென்றனர், உள்ளே அவர் இவர்களை வரவேற்று உட்கார சொல்லி படிவத்தை வாங்கி கொண்டு , கல்லூரியின் பெருமையை பற்றி சொல்லி கொண்டிருக்கும் போது , நித்திலனை பார்த்து என்ன பிரிவு தேர்ந்தெடுத்து உள்ளாய் என கேட்க, அதற்கு அவனுடைய அம்மா BCA என்று சொன்னார். அவரும் அந்த பிரிவில் சேர்த்து கொண்டு பிறகு பீஸ் பண்ணிட்டு வகுப்பறைக்கு போக சொன்னார். அவர் என்னை அழைத்து நாளை கல்லூரிக்கு வரும்போது முடி வெட்டி கொண்டு வரச்சொன்னார், அதற்கு அம்மா அவரிடம் சாமிக்கு வேண்டி கொண்டுருக்கிறோம் என்று சொல்ல அவரும் சரி என்று சொல்லி அனுப்பினார். அம்மாவை கல்லூரியின் கேன்டீன் ல் உட்கார சொல்லி விட்டு நான் பீஸ் கட்ட சென்றேன். நான் அங்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது நிவாசினி அந்த பக்கம் வந்தாள், என்னை பார்த்து விட்டு " என்னை நியாபகம் இருக்கிறதா என்று கேட்டாள்" , நான் யோசித்து "உங்களை எங்கு பார்த்தேன் என்று நியாபகம் இல்லை என்றேன்". அவள் என்னிடம் இருந்த அந்த படிவத்தை வாங்கி கொண்டு நேராக ஆபீஸ் உள்ளே சென்று பீஸ் காட்டினாள். பின்பு இருவரும் வெளியே வந்தோம் பிறகு நான் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு , அம்மா இருக்கும் இடத்திற்கு வந்து அவர்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
அன்று மதியம் அம்மாவும் நானும் வெளியே சென்றோம் , அப்படியே அவரை எங்களுடைய ஊருக்கு அனுப்பி விட்டு என்னுடைய விடுதிக்கு செல்ல என்னுடைய உடமைகளை எடுத்து கொண்டு வந்தேன்.
விடுதி காவலர் எனக்கு 3 நம்பர் அறையை கொடுத்தார், உள்ளே சென்றேன் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான், அவன் என்னிடம் வந்து " என் பெயர் மணி என்றான் நானும் என் பெயரை சொல்லி கையை கொடுத்தேன். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது , இரு ஆண்கள் வந்து எங்களை வெளியே போக சொல்லி எங்கள் அறையை சுத்தம் செய்து விட்டு, என்னிடம் வந்து அவரிடம் சொல்லிவிடுங்கள் என்றான். நான் புரியாமல் நிற்க இன்னொருவன் மணியிடம் சென்று நீதான் இவனை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நீ அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு சென்றான் நாங்கள் இருவரும் புரியாமல் விழித்தோம்.
மறுநாள் நாங்கள் இருவரும் கல்லூரிக்கு கிளம்பினோம் , எங்களுக்கு தெரியும் இன்று முதல் நாள் அதனால் சீனியர் ராகிங் செய்வார்கள் என்று, அதிலிருந்து தப்பிக்க யோசித்து கொண்டே சென்றோம்.
Comments
Post a Comment