கதாநாயகியின் அறிமுகம்,
என் பெயர் நித்திலன் , நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். என் அம்மாவின் பெயர் நிர்மலா, அப்பாவின் பெயர் ஷங்கர் , எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா அதில் ஒரு அண்ணன் மற்றும் அக்கா சிறு வயதிலேயே இறந்து விட்டனர், இன்னொரு அண்ணன் அவன் பெயர் பாலா. அம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அதுவும் ஆறு வயதில் இறந்து விட்டால் , அதனால் அவர்களுக்கு பெண் பிள்ளை இல்லாதது வருத்தமாகவே இருந்ததது. நான் பிறக்கும் போது பெண்ணாக பிறக்க வேண்டும் வேண்டினாள் ஆனால் நான் பிறந்து விட்டேன் அதுவும் சற்று உடல் திறன் குறைவாக பிறந்தேன் ஆதலால் மருத்துவர் அம்மாவிடம் இவன் மற்றவர்கள் உடல் வலிமை இல்லை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றார். அதனாலேயே அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம், எப்போதும் அவருடன் இருக்க சொல்லுவார். சிறு வயதில் எனக்கு என் அக்காவின் உடைகளை போட்டு அழகு பார்ப்பாள். இதனை பிடிக்காத என் அப்பா அம்மாவை திட்டுவார் அதனால் அம்மா எனக்கு பெண் உடை அணிவதை நிறுத்தி விட்டாள். நான் இதுவரை வெளியே வந்து நண்பர்களிடம் விளையாடியது கூட இல்லை ஏனென்றால், நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது மைதானத்தில் விளையாடி கொண்டு இருக்கும் போது எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை வந்தது அதில் அவன் என்னை வயிற்றில் நன்றாக அடித்ததால் நான் வலி தாங்க முடியாமல் அப்படியே மயங்கி கீழே விழுந்து விட்டேன். அன்றிலிருந்து என் அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது இல்லை, என்னை அவர் பாட்டு மற்றும் நடனம் கற்று கொள்ள சொல்லி சேர்த்து விட்டார். விடுமுறை நாட்களில் மற்றும் இரவு நேரங்களில் அம்மாவுடன் சேர்ந்து சீரியல்களை பார்ப்பது, அம்மாவுக்கு வீட்டு வேலைகளை செய்ய உதவுவது போன்ற வேலைகளை செய்வேன். அம்மா என்னிடம் நீ எப்பவும் முடி வெட்ட கூடாது சொல்லி எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எனக்கு முடி கழுத்தளவு இருக்கும். சில சமயம் நான் அம்மாவிற்கு தலை மசாஜ் செய்து ஜடை போட்டு விடுவேன் . அவள் என்னை எப்பவும் "நித்தி " என்று கூப்பிடுவாள். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்என்னிடம் " நீ என் பொண்னாடா எப்போவும் வீட்டிலேயே இருக்க வீட்டு வேலைகளை செய்து கொண்டு என்று என்னையும் அம்மாவையும் கேலி செய்வார்கள் என்ன செய்ய அவர்கள் அம்மாவின் நண்பர்கள் அதனால் நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. என் அப்பாவுக்கு என்னையும் என் அண்ணனையும் எப்படியாவது விளையாட்டு துறையில் சேர்த்து விடவேண்டும் எந்தது ஆசை. என் அண்ணனை கபடியிலும், அம்மா என்னை ஷுட்டில் விளையாட சொன்னார். எனக்கும் என் அண்ணனுக்கும் 8 வயது வித்தியாசம். அவன் எப்படியோ கஷ்டப்பட்டு அணியில் சேர்ந்து விட்டான் அதனால் நானும் அப்படி போக வேண்டும் என்று என்னை அவன் படித்த விளையாட்டு கல்லூரியில் சேர்க்க தான் நாங்கள் சென்னை வந்துள்ளோம். இப்பவும் எனக்கு கழுதளவு முடி இருக்கு, முகத்தில் முடி இல்லை ஏனென்றால் எனக்கு சிறு வயதில் இருந்து மஞ்சள் தேய்த்து குளிக்க வைத்ததாக அம்மாவின் தோழி சொல்லுவார். நான் நாளை கல்லூரில் சேர போகிறேன் துளி கூட விருப்பம் இல்லாமல்.
கதாநாயகனின் அறிமுகம்,
கதாநாயகனின் பெயர் நிவாசினி , அவளுக்கு ஒரு தம்பி இருக்கிறான் அவன் பெயர் ராஜ். அவள் அம்மாவின் பெயர் சீதா மற்றும் அப்பாவின் பெயர் ராஜா. அவள் சிறு வயதில் இருந்தே சுதந்திரமாக வளர்ந்தவள். இவள் என்னை விட 3 வயது பெரியவள். இவள் அப்படியே என்க்கு எதிரானவள், இவள் இப்போது ஆண்களை போல முடி வெட்டி கொண்டு எப்போதும் ஆண்களை போல உடை அணிவாள். இவளை பற்றி அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்
Comments
Post a Comment