Skip to main content

Posts

Showing posts from December, 2020

என் நித்திய வாசம்💘 8

மறுநாள் அங்கு இருக்க பெண்களை அறிமுக படுத்தினார்,பிறகு அணியில் விளையாட கூடிய மாணவர்களை அறிமுகம் செய்த்தாள்.  கொஞ்ச நாட்களாக பெண்கள் உடையில் அணிவதால் இப்போது  பழகி விட்டது.  விளையாட்டு போட்டிகளும் ஆரம்பமானது நாங்களும் மற்ற பெண்கள் கல்லூரிக்கு சென்று விளையாடி முதல் பரிசு பெற்றோம் , அதற்கு பிறகு பல்கலைக்கழக போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகளை வென்றோம். இப்படியே ஒரு மாதம் போனது.  ப்ரின்சிபால் என்னையும் காவியாவையும் தனியாக அழைத்து பாராட்டினார், அதன் பிறகு வழக்கம் போல ஆண்கள் உடைக்கு மாறினேன், காவியா எனக்கு நன்றி சொன்னால் , பிறகு நான் அவளிடம் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு என்னுடைய விடுதிக்கு சென்றேன்.  மறுநாள் நான் கல்லூரிக்கு சென்றேன் எல்லோரும் என்னை பார்த்து சிரிக்க  ஒன்றும் புரியாமல் இருத்தேன். அப்போது ராஜேஷ் என் அருகில் வந்து நின்று கொண்டு "மச்சி இந்த பொண்ணு batmitton நல்லா விளையாடுறா என்று சொல்ல , அதற்கு இன்னொரு பையன்  அந்த பொண்ணு பெயர் என்ன என்று கேட்க நித்தி என்றான். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, நாம் விளையாடியது எப்படி இவர்களுக்க...

என் நித்திய வாசம்💘 7

நான் ப்ரின்சிபால் அறைக்குள் சென்றேன் உள்ளே  காவியா மேடம் மற்றும் ப்ரின்சிபால்  பேசிக்கொண்டு இருப்பதை கவனிக்கவில்லை. பின்பு அவர்களை பார்த்ததும் நான் வெளியே வர நினைத்தேன் அப்போது ப்ரின்சிபால் என்னை என்ன என்று கேட்க நான் அவரிடம் நடந்ததை கூறினேன். பிரிசின்பால் : நித்திலன் நீங்கள் எந்த விளையாட்டு விளையாடுவீகள் என்று கேட்டார் நித்தி :  batmitton என்று சொன்னேன் ப்ரின்சிபால் :  நல்லது என்று சொல்லி , அவர் காவியா மேடத்திடம் பெண்கள் அணி batmitton ல் ஒரு கோப்பை கூட வாங்க வில்லை என்று கேட்க காவியா : ஆமாம் , என்றார் ப்ரின்சிபால் : என்னிடம் ஒரு நல்ல யோசனை இருக்கு , நித்திலன் பார்ப்பதற்கு பெண் போலவே இருக்கறான் , ஆதலால் இவனை பெண்கள் அணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றார்.  நாங்கள் இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டோம்.  நித்தி : இல்லை , நான் பெண்கள் அணியில் விளையாட வில்லை என்று சொன்னேன். ப்ரின்சிபால் : உனக்கு விளையாட விருப்பம் இல்லை என்றால், தாராளமாக உன்னுடைய TC வாங்கி கொண்டு செல்லுங்கள் என்றார், காவியா இந்த முறை நீங்களும் கோப்பை வெற்றி பெற ம...

என் நித்திய வாசம்💘 6

நிவாசினி பொதுவாக சொன்ன விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டேன் அப்போதுதான் எனக்கு தெரியவில்லை அதனுடைய விளைவு  கொஞ்ச நாட்கள் கழித்து தான் தெரிந்தது. திடிரென்று ஒருநாள் ராஜேஷ் அவளுக்கு காதலை சொல்ல போவதாக சொன்னான் , அதுவும் அனைத்து மாணவரின் முன்னணியில் எண்று எனக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் அவன் அனைவரையும் வர  சொல்லி அவனுடைய காதலை சொல்ல , " அதற்கு அவள் எனக்கு உன் மீது காதல் இல்லை என்னை மன்னித்து விடு என்று சொல்லி, என்னிடம் வந்து நிவாசினி என்னை காதலிப்பதாக சொன்னாள் , நான் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றேன்."  பிறகு அவள் என்னை கட்டி அணைத்து கொண்டாள். அப்போது ராஜேஷ் நிவாசினி அருகில் வந்து " என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை என்று கேட்டு , உனக்கு என்னை பிடிக்கும் என்று நித்திலன் சொன்னதால் தான்,  என் காதலை சொன்னேன் என்ற சொல்ல , நிவாசினி முகம் மாறியது , தொடர்ந்து ராஜேஷ் அவளிடம் அவனை உன்னிடம் என் காதலுக்கு தூதாக தான் அனுப்பினேன் ஆனால அவன் உன் வாயால் அவனை காதலிப்பதாக சொல்ல வைத்து விட்டான் என்று சொன்னான்.   நிவாசினி என்னை பார்த்து ராஜேஷ் சொல்வது உண்மையா என்று கேட்க , ...

என் நித்திய வாசம்💘 5

மணி என்னிடம் இருவரும் தனியாக செல்வோம் என்று கூறி அவன் வேறு ஒரு வழியில் சென்றான். நானும் என்னுடைய வகுப்பறைக்கு செல்லும் போது சில சீனியர் மாணவர்கள் என்னை பார்த்துவிட்டு அழைத்தனர். நான் அருகில் சென்றதும் ஒரு மாணவன் என்னிடம் " என்ன மனசுல தோனி னு நினைப்பு அவரை மாதிரி முடி விட்டிருக்க என்று சொல்லி முடியை பிடித்து பிறகு நடனம் ஆட சொன்னார்கள் , நானும் ஆடி கொண்டே இருக்கும் போது ஒருவன் "மச்சி இவன் நல்லா தான் நடனம் ஆடுறான், என்று சொல்ல , சரி எந்த பிரிவு உனக்கு என்ன விளையாட்டு விளையாட தெரியும் என்று கேட்க,  நான் ஷுட்டில் விளையாடுவேன் என்றேன்.  அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவன் என்னை நோக்கி வந்தான், அப்போது இன்னொரு மாணவன் இவன் பெயர் ராஜேஷ்  , கல்லூரி ஷுட்டில் அணியின்  கேப்டன் என்றான். ராஜேஷ் என்னருகில் வர அப்போது என்னை யாரோ பின்னாடி இழுத்தது போல் இருந்தது திரும்பி பார்த்தால் நிவாசினி நின்று கொண்டிருந்தாள். அவள் ராஜேஷிடம் இனிமேல் இவனை ராகிங் பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டு என்னை அழைத்து கொண்டு கேன்டீன் சென்றாள். நிவாசினி என்னை பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள், நான் அவளிடம் வகுப...

என் நித்திய வாசம்💘 4

இன்று  நித்திலன் கல்லூரியில் சேர்க்கைக்கான படிவம் அவன் வாங்கி வந்திருந்தால் அதை எழுதி கொண்டு இருவரும் கல்லூரிக்கு புறப்பட்டனர் . இருவரும் கல்லூரியை அடைந்ததும் நேராக முதல்வர் அறைக்கு சென்றனர், உள்ளே அவர் இவர்களை வரவேற்று உட்கார சொல்லி படிவத்தை வாங்கி கொண்டு , கல்லூரியின் பெருமையை பற்றி சொல்லி கொண்டிருக்கும் போது , நித்திலனை பார்த்து என்ன பிரிவு தேர்ந்தெடுத்து உள்ளாய் என கேட்க, அதற்கு அவனுடைய அம்மா BCA என்று சொன்னார். அவரும் அந்த பிரிவில் சேர்த்து கொண்டு பிறகு பீஸ் பண்ணிட்டு வகுப்பறைக்கு போக சொன்னார். அவர் என்னை அழைத்து நாளை கல்லூரிக்கு வரும்போது முடி வெட்டி கொண்டு வரச்சொன்னார், அதற்கு அம்மா அவரிடம் சாமிக்கு வேண்டி கொண்டுருக்கிறோம் என்று சொல்ல அவரும் சரி என்று சொல்லி அனுப்பினார். அம்மாவை கல்லூரியின் கேன்டீன் ல் உட்கார சொல்லி விட்டு நான் பீஸ் கட்ட சென்றேன். நான் அங்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது நிவாசினி அந்த பக்கம் வந்தாள், என்னை பார்த்து விட்டு " என்னை நியாபகம் இருக்கிறதா என்று கேட்டாள்"  , நான் யோசித்து "உங்களை எங்கு பார்த்தேன் என்று நியா...

என் நித்திய வாசம்💘 3

நீத்தி 3 அன்றிரவு அந்தப் பெண்கள் தங்கும் விடுதியின் இரு படுக்கைகள் கொண்ட அறையில் தனது கட்டிலில்  அமர்ந்திருந்த பவானி கைபேசியினில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மெத்தை படுக்கையில் மேலே பார்த்தவாறு படுத்திருந்த நிவாசினி, நித்தியை பற்றி யோசித்து கொண்டிருந்தாள். “யார் அவன்? எனக்கு ஏன் அவனை நினைச்சாலே மனசெல்லாம் பூரிச்சு போகுது? கனவுல கண்ட அந்த நிநி டாட்டூ எப்படி இவர் கையில இருக்கு?” என்று எந்த மாதிரி யோசித்தாலும் மனதின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வில்லை. அதெப்படி நாம் நினைப்பதை போல அவனும் நினைக்கிறான் என்று யோசிக்க, அப்போது பவானியின் குரல்  மின்சாரம் போயி  இரண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் வரவில்லை உள்ளே என்னடி பண்ற கேட்டு கொண்டு அறைக்குள் வந்தாள் பவானி, உள்ளே வந்த அவள்  “ஹே ஹாசினி என் ஃபோன்ல சார்ஜ் இல்லடி! உன் ஃபோன கொடு என்று கேட்க அவளும் கொடுத்தால் பிறகு யோசிக்க ஆரம்பித்தாள்.  அவளிடம் அப்படி என்னடி யோசித்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்க , அதற்கு நிவாசினி  “நம்ம காலைல பார்த்தோமேடி!  அவனை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன் என்றாள், பா...

என் நித்திய வாசம்💘 2

கதாநாயகியின் அறிமுகம், என் பெயர் நித்திலன் , நாங்கள் நடுத்தர  குடும்பத்தை சேர்ந்தவன். என் அம்மாவின் பெயர் நிர்மலா, அப்பாவின் பெயர் ஷங்கர் , எனக்கு இரண்டு  அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா அதில் ஒரு அண்ணன் மற்றும் அக்கா சிறு வயதிலேயே  இறந்து விட்டனர், இன்னொரு அண்ணன் அவன் பெயர் பாலா.  அம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அதுவும் ஆறு வயதில் இறந்து விட்டால் , அதனால் அவர்களுக்கு பெண் பிள்ளை இல்லாதது வருத்தமாகவே இருந்ததது. நான் பிறக்கும் போது பெண்ணாக பிறக்க வேண்டும் வேண்டினாள் ஆனால் நான் பிறந்து விட்டேன் அதுவும் சற்று உடல் திறன் குறைவாக பிறந்தேன் ஆதலால் மருத்துவர் அம்மாவிடம் இவன் மற்றவர்கள் உடல் வலிமை இல்லை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றார். அதனாலேயே அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம், எப்போதும் அவருடன் இருக்க சொல்லுவார். சிறு வயதில் எனக்கு என் அக்காவின் உடைகளை போட்டு அழகு பார்ப்பாள். இதனை பிடிக்காத என் அப்பா அம்மாவை திட்டுவார் அதனால் அம்மா எனக்கு பெண் உடை அணிவதை நிறுத்தி விட்டாள்.  நான் இதுவரை வெளியே வந்து நண்பர்களிடம் விளையாடியது கூட இல்லை ஏனென்றால், நான் ஆறாம் வ...

என் நித்திய வாசம்💘 1

மருத்துவமனையின் பிரசவ அறை அது உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியில் துடிக்க , வலி மிகுதியால் கண்களில் கண்ணீரும், புலம்பலுமாய், அறை மயக்கமுமாய்  துடித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் வலியை தன் வலியாய் மனதில் ஏற்று கண்ணீர் ஓடிய விழிகளுடன் பதட்டத்தின் உச்சியில் அவள் கைகளை பிடித்து கொண்டிருந்தான்  அவன். அரை மயக்கமாய் நீர் நிறைந்த கண்களில் மங்கலாகவே அவன் முகம் தெரிந்தது அவளுக்கு. ஆயினும் அவளால் உணர முடிந்தது அவனின் ஆழ் காதலை அவன் கைகளின் இறுக்கத்தில். பாசமாய் அவன் இப்பொழுது அவள் தலையை தொட அவன் கைகளின் டாட்டூ காணக் கிடைக்கிறது அவளுக்கு. "நிநி" என ஸ்டைலாய் படு அழகாய் அவன் வெளிர் நிற கைகளில் அம்சமாய் இருந்தது அந்த டாட்டூ. வலியின் உச்சத்தில் அவள் வீறிட்டு அலற, “அம்மாஆஆஆஆஆஆ” அதே வலி மிகுந்த அலறலுடன் எழுந்து உட்கார்ந்தாள் நம் நாயகி. முகமெல்லாம் வியர்வை துளி நடுக்கமுமாய் தன் வயிறை தடவிப் பார்த்துக் கொண்டாள். இன்னமும் அவ்வலியில் இருப்பதாய் தோன்றியது அவளுக்கு. “ச்சே கனவா!!!” மனதிற்குள் கூறிக் கொண்டாள். தன் பக்கத்தில் இருந்த  நீரை முழுவதுமாய் குடித்தாள். பிறகு அவள், “ஹப்பா க...