நான் final year மருத்துவ கல்லூரிமாணவி , நான் என் வகுப்பில் உட்காந்து கொண்டிருந்தேன் அப்போது எங்கள் வகுப்பறைக்கு வந்த ஆபீஸ்பாய் பேராசியரிடம் இந்த வகுப்பில் படிக்கும் ராஜி என்ற பெண்ணிற்கு போன் வந்திருக்கிறது , ப்ரின்சிபால் அவரை வர சொன்னார் என்று சொன்னார். பிறகு பேராசிரியர் என்னிடம் போய் பேசிவிட்டு வா என்று சொன்னார் நானும் அவர் அறைக்கு சென்றேன்
நான் உள்ளே சென்றதும் ப்ரின்சிபால் என்னிடம் உன் அக்கா( ரம்யா ) போன் செய்திருக்கிறாள் பேசும் படி சொல்லி அவருடைய போனை கொடுத்தார். நான் போனை வாங்கி ஹலோ! என்று சொல்ல , அக்கா என்னிடம் ராஜி உடனே கிளம்பி வீட்டுக்கு வா அம்மா உன்னை பார்க்க வேண்டும் என சொன்னார். நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றேன் ஆனால் அக்கா சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்ல எனக்கு பதட்டமாக இருந்தது , அக்கா போனை வைத்து விட்டாள். நானும் ப்ரின்சிபால் கிட்ட சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்ப என் விடுதிக்கு வந்தேன். பிறகு துணிகளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது எதிரே என்னுடைய தோழி திவ்யா வந்தாள். அவளிடம் சொன்னேன் பிறகு அவள் என்னிடம் பயப்படாமல் போ ஒன்றும் நடக்காது என்று சொல்லி ரயில்வே நிலையம் வந்து என்னை drop செய்து விட்டு சென்றாள். மறுநாள் காலை நான் வீட்டை சென்றுடைந்தேன் ஆனால் வீட்டில் யாருமில்லை பிறகு அக்காவுக்கு போன் செய்தேன் அவள் மருத்துவ மனைக்கு வர சொன்னாள் . நான் அந்த மருத்துவ மனைக்கு சென்றேன் அப்பா மற்றும் அக்கா நின்று கொண்டிருக்க அம்மா இல்லை. அதனால் அக்காவிடம் அம்மா எங்கே என்று கேட்க , அமைதியாக இருந்தால் அப்போது அங்கு வந்த டாக்டர் அப்பவிடம் ராஜி வந்துட்டங்களா அவரை தான் உங்க மனைவி கேட்டு கொண்டிருக்கிறாள் என்று சொல்ல , அப்பா என்னிடம் உள்ளே சென்று அம்மாவை பாரக்க சொன்னார். நான் அழுது கொண்டே உள்ளே சென்றேன் அம்மா தூங்கி கொண்டிருக்க அருகில் சென்று அவள் கைகளை பிடித்து எழுந்திருங்க அம்மா உங்க பொண்ணு ராஜி வந்திருக்கேன் என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன் , பிறகு அவள் கைகளை பிடித்து கொண்டு அருகில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அம்மா கண் விழிக்க நான் அவளை பார்த்து இப்போது எப்படி அம்மா இருக்கிறீர்கள் என்று கேட்க, அம்மா அதான் நீ வந்திட்டோயே இனிமேல் எனக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என்று சொன்னார். அன்று இரவு நான் அம்மாவிற்கு சாப்பிடு ஊட்டி விட்டு , அவளை உறங்க வைத்து விட்டு அருகிலேயே உட்காந்து கொண்டேன்.Night shift நர்ஸ் வந்து அம்மாவிற்ற்கு ஊசி போட்டு விட்டு அருகில் உட்கார அவள் என்னிடம் நீங்க தான் ராஜியா உங்கள் அம்மா இந்த பெயரை தாரக மந்திரம் போல சொல்லி கொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடைய இரண்டாவது பெண் நினைத்தேன் ஆனால் உங்களுக்கு மீசை தாடி வளரும் போல நீங்கள் ஒரு ஆண் ! தானே, இவர்கள் எதற்கு உங்களை ராஜி என பெண் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று கேட்க நான் சிரித்து கொண்டே என் பழைய நினைவுகளை யோசித்தேன். உடனே நர்ஸ் சொல்லுங்கள் ராஜி உங்களை ஏன் பெண் பெயரை கொண்டு அழைக்கிறார்கள் என்று கேட்க நானும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பற்றி சொல்ல ஆர்பித்தேன்.
Comments
Post a Comment